மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலி; 25 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
போபால்: மத்தியப் பிரதேசத்தின் சாகர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை துவங்கி உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள பண்டா தாலுகாவுக்கு உட்பட்ட பராஜ் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 25க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பாதிகக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அதுமட்டுமின்றி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட எஸ்பி அனுராக் சுஜானியா தலைமையிலான போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை துவங்கி உள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சாகர் மாவட்ட கலெக்டர் பிரதிபா பால் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராயம் குடித்து பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரண்டு கிராமங்களில் டாக்டர்கள் குழு பரிசோதனைகளை நடத்தி வருகிறது. அறிகுறிகள் தென்பட்டால் டாக்டர்களை அணுக வேண்டும்.
குறிப்பாக கடந்த 24 முதல் 48 மணி நேரத்தில் மது குடித்தவர்கள் கண்டிப்பாக டாக்டர்களிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நாங்கள் கண்காணித்து வருகிறோம்; இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
போதை இல்லாத இந்தியாவை உருவாக்க போகிறோம் என்று இன்றுதான் உள்துறை அமைச்சர் சொல்லியுள்ளதா தினமலர் செய்தி...அந்த செய்திக்கும் இதற்கும் சம்பந்த படுத்த வேண்டாம்.
அங்கதான் நல்ல சாராயமும் ஊத்தறாங்களே..
25 வருட பிஜேபி ஆட்சி, 12 வருட டபிள் என்ஜின் சர்கார் ஆட்சி .
சமூக நீதி என எதுவும் இருக்காது வேலைவாய்ப்பு சுத்தம்
வேதனை தரும் செய்தி. ஆனால் இதே மத்திய பிரதேசத்தில் ஒரு 20 வயதான பிட்டு தபாஹி எனும் ஒரு இளைஞன் தனியொருவனாக ஒரு ஆற்றையே சுத்தப்படுத்தி இன்றும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் கவனத்தையே ஈர்த்திருக்கிறார்.
முதலில் அந்த இளைஞனுக்கு வாழ்த்துக்கள் கூறிவிட்டு, இந்த செய்திக்கு வருகிறேன். ஒரு இளைஞன் சாதித்து நல்ல பெயர் பெற்று தருகிறான் அவன் வாழும் மாநிலத்துக்கு.
ஆனால் பல குடிகாரர்கள் அதே மத்திய பிரதேசத்துக்கு கள்ளச்சாராயம் குடித்து அவப்பெயர் ஈட்டுகிறார்கள். ஏன் எல்லோரும் பிட்டுவைப்போல மாறக்கூடாது?
மத்தியப் பிரதேசத்திலும் திராவிட மாடல் ஆட்சி தான் நடக்கிறதா? பாஜக ஆட்சியில் இல்லையோ?
நியாயமான கேள்வி ...... அங்கே அரசு இந்த அவலத்தை பத்து லட்சம் கொடுத்து ஊக்குவிக்குமா அல்லது அதற்கு மாறாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமா என்று கவனிப்போம் .....
தலைக்கு பத்து லட்சம் கிடைக்குமா
25 lakhs cash, 3bhk house and one government job specially revenue department
பலியான மது பிரியர்களுக்கு.... தமிழகமாக இருந்தால் பத்து லட்சம் கிடைத்திருக்கும்.மேலும்
-
ஐந்தாயிரம் ஓட்டுகள்: தி.மு.க.,வில் வட்டச் செயலாளருக்கு நிர்ணயம்: உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியில் சீரமைப்பு
-
திருக்கல்யாணம்
-
தகவல் சுரங்கம் : சுத்தமான காற்று தினம்,சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம்
-
துப்பாக்கி சுடுதல் போட்டி
-
கிடைத்த மதிப்பெண்ணுக்கு ஏற்ப வாழ பெற்றோர் கற்பிக்க வேண்டும் குமரி மாவட்டத்தினர் விழாவில் யோசனை
-
பால்குடம் எடுத்த பக்தர்கள்