அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை
டெஹ்ரான்: அமெரிக்கா அச்சுறுத்தல், தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறந்து வைக்கப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல்களால் சேதமடைந்த ராணுவ கட்டமைப்பை மீட்டெடுக்க ஈரான் முயன்று வருவதுடன், தன் ஆதரவு அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டு பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஈரானின் வான் பாதுகாப்புத் தளங்கள், ரேடார் கருவிகள், கடல்சார் தளங்கள், கடலுக்கு அடியில் கன்னி வெடிகள் வைக்கும் தளங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் ஆகிய 60-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் குண்டுவீசி தாக்கின. அதே நேரத்தில், 1.80 கோடி பேரல் கச்சா எண்ணெயுடன் சென்ற, 40 வணிக கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த, அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு அளித்தன.
இந்நிலையில் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் கூறியதாவது: அமெரிக்கா அச்சுறுத்தல், தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறந்து வைக்கப்படும். வரும் நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தக்கூடும். ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட பகுதியை தடைசெய்யப்பட்ட மண்டலமாக ஈரான் வரும் நாட்களில் அறிவிக்கும்.
எங்களது அனுமதி இல்லாமல் இந்தத் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழையும் மற்றும் கடக்க முயலும் எந்தவொரு வணிகக் கப்பல்களும் ஈரானின் பொருளாதாரத் தடைப் பட்டியலில் சேர்க்கப்படும்; பாதுகாப்பு காரணங்களுக்காக ஹார்முஸ் ஜலசந்தியின் முழுமையான கட்டுப்பாடு ஈரானின் கைகளிலேயே உள்ளது; மீண்டும் போக்குவரத்திற்காகத் திறப்பதற்கான முறையான தேவைகளை ஈரான் தயாரித்து வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து சீரடைய வேண்டுமானால் தற்போதைய மோதல்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (2)
Dv Nanru - mumbai,இந்தியா
07 செப்,2026 - 11:08 Report Abuse
டிரம்ப் வாயைத் திறக்காமல் இருந்தாலே போதும்
அமெரிக்காவின் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தி திறந்து வைக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியைப் பார்க்கும்போது ஒரு கேள்வி எழுகிறது:
இன்று உலகின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றமும், மோதல்களும், போர் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருவதற்கு காரணம் யார்?
எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே ஒருவர்தான் முழுமையான காரணம் என்று கூறுவது சரியானதல்ல. ஆனால், அமெரிக்காவின் நடவடிக்கைகளும், குறிப்பாக அதிபர் டிரம்பின் கடுமையான அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கையும் உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது மறுக்க முடியாதது, அதனால் ஒரு சாதாரண மனிதனின் கேள்வி:
டிரம்ப் கொஞ்சம் அமைதியாக இருந்தாலே போதாதா?
அச்சுறுத்தல் வேண்டாம். தாக்குதல் வேண்டாம்.போர் பேச்சு வேண்டாம்.
பேச்சுவார்த்தை இருக்கட்டும். தூதரகம் இருக்கட்டும். அமைதி இருக்கட்டும், அப்படி நடந்தால் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் சுமூகமாக இயங்கும் வாய்ப்பு உருவாகலாம் எண்ணெய் விலை மற்றும் உலக வர்த்தகத்தில் ஏற்படும் பதற்றமும் குறையலாம்.
உலக மக்களுக்கு போர் வேண்டாம் — அமைதிதான் வேண்டும் ஒரு தலைவரின் வார்த்தைகள் உலக சந்தையையும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடிய காலம் இது, எனவே தலைவர்கள் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும்.
போர் தொடங்குவது எளிது.
ஆனால் அமைதியை மீண்டும் கொண்டுவருவது மிகவும் கடினம்,
டிரம்ப் மட்டுமல்ல — உலகின் அனைத்து தலைவர்களும் கொஞ்சம் அமைதியாக சிந்திக்க வேண்டிய நேரம் இது. அமெரிக்க அதிபர் வாயைத் திறக்காமல் அமைதியாக இருந்தாலே போதும். இந்த உலகத்துல இப்போது நடக்கின்ற பிரச்சனைகள் எல்லாமே இதற்கு முழு முதற்காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதனால் டிரம்ப் வாயைத் திறக்காமல் இருந்தாலே போதும் உலகம் அமைதியாகிடும், ஹார்முஸ் ஜலசந்தி திறந்து வைக்கப்படும், ஒரு அமைதியான நிலை உலகம் முழுவதும் ஏற்படும்.
நடக்கின்ற பிரச்சனைகளுக்கு நார்தாங்காயாக மையக் காரணமாக டிரம்ப்தான் 0
0
Reply
RK - ,
07 செப்,2026 - 09:16 Report Abuse
அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் போல.. !!! செம்ம அடி போல.. முதல்ல தீவிர வாத கும்பல்களுக்கு உதவுவதை நிறுத்து. உன் நாட்டை மட்டும் கவனி. மத வெறியை நிறுத்தி நல்ல கல்வி கொடு. பெண்களை அடிமை படுத்தாதே . 0
0
Reply
மேலும்
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
-
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்
-
போட்டி தேர்வுக்கு தயாராகலாம்
Advertisement
Advertisement