புளோரிடாவில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற சரக்கு விமானம்; 5 பேர் பலி

1

புளோரிடா: மியாமி விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற அமேசான் பிரைம் ஏர் சரக்கு விமானம், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி விமான நிலையத்தில், நேற்று மதியம் 2 மணியளவில் அமேசான் பிரைம் ஏர் சரக்கு விமானம் தரையிறங்கியது. அப்போது, பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், ஓடுபாதையைத் தாண்டி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, உடனடியாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பிறகு, 4 ஓடுபாதைகளில் 2 மட்டுமே மாலையில் திறக்கப்பட்டன. இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement