இலவச மருத்துவ முகாம் 142 பேருக்குப் பயன்
அனுப்பர்பாளையம்:திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப், ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தின. சென்ட்ரல் லயன்ஸ் கிளப் வளாகத்தில் நடைபெற்ற முகாமில், பொது மருத்துவப் பிரிவில் 82 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
இதய பரிசோதனை முகாமில் 36 பேருக்கு இ.சி.ஜி., மற்றும் எக்கோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கண் சிகிச்சை முகாமில் 24 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை சென்ட்ரல் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement