துணிக்கடையில் தீ விபத்து

சவுகார்பேட்டை:துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

சென்னை, சவுகார்பேட்டை - மின்ட் தெருவில், தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில், கன்சராம் என்பவர் நவீன ஆடையகம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடித்து கடையை மூடி சென்றுள்ளார்.

நேற்று காலை துணிக்கடையில் இருந்து, கரும்புகை வெளியானது. அக்கம் பக்கத்தினர், எஸ்பிளனேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, புடவைகள் உட்பட துணிகள் எரிந்து நாசமாயின. சம்பவம் குறித்து, யானைகவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். விசாரணையில், துணிக்கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிந்தது.

Advertisement