சாத்துாரில் 76 மி.மீ., மழை

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 76 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கியதை போல கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை நேரத்தில் மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது.

நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8:00 மணி வரையான நிலவரப்படி திருச்சுழியில் 4 மி.மீ., காரியாபட்டியில் 1.40, ஸ்ரீவில்லிப்புத்துாரில் 14.20, விருதுகநகரில் 2.20, சிவகாசியில் 24, கோவிலான்குளத்தில் 21.20, அருப்புக்கோட்டையில் 6.50 மி.மீ., மழையளவு பதிவானது. இதில் அதிகபட்சமாக சாத்துாரில் 76 மி.மீ., மழையளவு பதிவானது.

மேலும் நேற்று காலை முதல் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் விருதுநகரில் லேசான சாரல் மழை பெய்தது. சிவகாசியில் நேற்று மாலை 5:00 மணி முதல் 45 நிமிடங்கள் பரவலாக மழை பெய்தது. அருப்புக்கோட்டை, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துாரில் மாலை முதல் சாரல் மழை பெய்தது.

Advertisement