சைபர் கிரைம் பணமோசடி புகார்கள்; ஸ்ரீவி., வத்திராயிருப்பு வழக்கு பதிவு

ஸ்ரீவில்லிபுத்துார், செப். 7-

சமூக வலைதளம் மற்றும்இணைய வழிகள் மூலம் செய்யப்பட்ட பண மோசடி குறித்து, சைபர் கிரைமில் கொடுத்த புகார்கள் மீது ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2024ல் ஸ்ரீவில்லிபுத்துார் கம்மாபட்டியை சேர்ந்த செல்வகணேஷ் 27 என்பவர், இன்ஸ்டாகிராமில் பார்ட் டைம் ஜாப் என வந்த விளம்பரத்தை பார்த்து, இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்சன் பணியில் வேலை இருப்பதாக கூறி ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார்.

2024ல் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த ஆசிரியை பட்டத்தரசியிடம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கஸ்டமர் கேரில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, ரூ.1 லட்சத்து 4597 பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்விரு சம்பவத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிப்ரவரியில், வத்திராயிருப்பு கோட்டையூரை சேர்ந்த முருகன் 43 என்பவரிடம் ஆர்.டி.ஓ. சலான் என்ற பெயரில் ரூ. 2 லட்சத்து 65 ஆயிரத்து 49 பண மோசடி செய்த சம்பவத்தில் வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement