இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: நெசவாளர்கள் பாதிப்பு

ராஜபாளையம்:ராஜபாளையம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதால் நெசவாளர்கள் உள்ளிட்ட சிறு குறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம் பகுதிகளில் விசைத்தறி கூடங்கள் மூலம் பேண்டேஜ் துணி உற்பத்தியும் சேத்துார், செட்டியார்பட்டி, புனல் வேலி உள்ளிட்ட பகுதிகளில் இலவச சேலை நெசவும் பெடல் தறிகள், நைட்டி உள்ளிட்ட ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி நடைபெறுகின்றன.

கடந்த சில தினங்களாக இப்பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அரை மணி நேரம் தொடங்கி 2 மணி நேரம் வரை நீடிக்கிறது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் ஏற்கனவே 4 மாதங்களுக்கு பின் வேலையில்லாமல் இருந்து தற்போது நுால் வழங்கப்பட்டு நெசவு பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் மின்தடையால் நெசவாளர்கள் உள்ளிட்ட சிறு குறு உற்பத்தியாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் : வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அணைகளில் நீர் இருப்பு, காற்றின் வேகம் குறைவால் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதை சமாளிக்க லோடு செட்டிங் என்ற வழக்கமான சரி கட்டும் முறையே சுழற்சி முறையிலான இந்த மின்வெட்டு, என்றனர்.

Advertisement