வனத்துக்குள் யானைகளை விரட்டிய வனத்துறையினர்
ஆயக்குடி: பழநி ரோட்டில் சுற்றித்திரிந்த யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்
பழநி ஆயக்குடி வரதாபட்டினம் மலையடிவார ரோட்டில் யானை நடமாட்டம் அடிக்கடி உள்ளன. முன்று யானைகள் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடமாடியது. வெகு நேரம் வனப்பகுதிக்குள் யானைகள் செல்லாத காரணத்தால் மக்கள் அச்சத்தில் இருந்தனர். உடனடியாக தகவல் அறிந்த வனத்துறையின் ரோந்துக் குழுவினர், ‘சைரன் ஒலி’ எழுப்பிய வாகனத்தில் வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளிக்க வேண்டும் என, அறிவுறுத்திச் சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement