மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

செப். 7

கோயில்

* கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி கம்பத்தடி மண்டபத்தில் நவக்கிரக ஹோமம், திசைக்காவலர், பேரொளி வழிபாடு, காலை 7:00 முதல் 10:00 மணி வரை, சித்திரை வீதி கம்பத்தடி மண்டபத்தில் எண் திசை வழிபாடு, திருமுறை விண்ணப்பம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* ஜெயந்தி உற்ஸவம்: நவநீத கண்ணன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, புஷ்பயாகம், காலை 7:00 மணி முதல், வெள்ளி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரத்தில் சுவாமி வீதியுலா, இரவு 7:00 மணி.

* சர்ச் பெருவிழா - இளையோர் தின சிறப்பு திருப்பலி: செயின்ட் மேரிஸ் சர்ச், கீழவாசல், மதுரை, தலைமை: கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி முதல்வர் அன்பரசு, மறையுரை வழங்குபவர்: மதுரை இயேசு சபை இளையோர் பணி பாதிரியார் ஜோ மார்ஷ், மாலை 6:00 மணி.

* சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணாநகர், மதுரை, தம்பதியர் தினத்தை முன்னிட்டு பாதிரியார் மைக்கேல் யூஜின் வழங்கும் திருப்பலி, காலை 11:30 மணி, பாதிரியார்கள் அலாய்சியஸ் துரைராஜ், எட்வின்ராஜ், எட்வின், புஷ்பராஜ், செபாஸ்டின், ஜேக்கப், நவீன் வழங்கும் திருப்பலி, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* ஏகாதசியை முன்னிட்டு ராமநாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தி: தெய்வ நெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - சுவாமி வேதாந்த ஆனந்தா சரஸ்வதி, காலை 6:30 மணி, திருமுறை இசை மகேஸ்வரன் ஓதுவார் குழுவினர், தலைமை: சுவாமி சுந்தரானந்தா சரஸ்வதி, சிறப்புரை: அருணகிரி, மாலை 6:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* கிருஷ்ண ஜெயந்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தீர்த்தம் விஜய்பாபு, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* ஏகாதசியை முன்னிட்டு அகண்ட ஹரே ராம மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

* ரகுவம்ச சரித்திரம் - கவுரவ விரிவுரை: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன், சிறப்புரை: மதுரைக் கல்லுாரி சமஸ்கிருத துறைத் தலைவர் மணிகண்டன், ஏற்பாடு: சமஸ்கிருதத் துறை, காலை 10:00 மணி.

* ஒன்பதாம் வகுப்பு துவக்க விழா: ராஜாஜி உயர்நிலைப்பள்ளி, மீனாம்பாள்புரம், மதுரை, தலைமை: எம்.எல்.ஏ., கல்லாணை, முன்னிலை: தலைமையாசிரியர் வினோத் பிரசாந்த், துவக்கி வைப்பவர்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், காலை 10:00 மணி.

* கழிப்பறை அமைப்பதற்கான பூமி பூஜை: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மஹபூப்பாளையம், மதுரை, தலைமை: மாவட்ட டி.ஆர்.எப்., சிறப்பு ஆலோசகர் குமரப்பன், பங்கேற்பு: கொடையாளர் சந்தீப், சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் மகாராஜன், பொருளாளர்கள் ஆசைக்கண்ணன், வாசுதேவன், ஆடிட்டர் சேதுமாதவா, பள்ளி தலைமையாசிரியர் நான்சி, ஏற்பாடு: மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம், மாலை 4:30 மணி.

பொது

* மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 10:00 மணி.

* கோட்ட அளவிலான தபால்துறை குறைதீர் கூட்டம்: முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம், தல்லாகுளம், மதுரை, காலை 11:00 மணி.

* அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க, கடன் தள்ளுபடி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஊர்வலம்: பென்னிகுயிக் பஸ் ஸ்டாண்டு முதல் எம்.எல்.ஏ., அலுவலகம் வரை, மேலுார், ஏற்பாடு: பென்னிகுயிக் பெரியாறு ஒருபோக விவசாயிகள் சங்கம், காலை 10:00 மணி.

* உயர்த்திய மைதான கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: ரயில்வே மைதானம் முன்பு, அரசரடி - மஹபூப்பாளையம் ரோடு, மதுரை, ஏற்பாடு: டி.ஒய்.எப்.ஐ., ஸ்போர்ட்ஸ் கிளப் அமைப்பு, காலை 8:00 மணி.

மருத்துவம்

* குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.

Advertisement