ஆசிய ஹாக்கி: இந்தியா அபாரம்
மொகி: ஆசிய கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த இந்திய பெண்கள் அணி 11-1 என, மலேசியாவை வீழ்த்தியது.
சீனாவின் மொகி நகரில், பெண்களுக்கான (21 வயது) ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி 10வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'எலைட்' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தியது.
இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணி, மலேசியாவை சந்தித்தது. இதில் கோல் மழை பொழிந்த இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 11-1 என்ற கணக்கில் தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணிக்கு பூஜா சாஹூ (1, 42வது நிமிடம்), பூர்ணிமா யாதவ் (4, 17), கீதா (28, 53), மானே (43, 58) தலா 2, பினிமா (8), கிருஷ்ணா சர்மா (14), சுக்வீர் கவுர் (21) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். மலேசிய அணிக்கு நுார் முகமது (38வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.
இதுவரை விளையாடிய 2 லீக் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, 6 புள்ளிகளுடன் 'எலைட் பிரிவில்' முதலிடத்தில் உள்ளது. நாளை நடக்கவுள்ள 3வது லீக் போட்டியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.
இந்தியா-ஜப்பான் 'டிரா'
ஆண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசனில், 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இந்தோனேஷியாவை வென்றது.
இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இந்திய அணிக்கு கேப்டன் அன்மோல் எக்கா 2 (4, 60வது நிமிடம்), அஷு மவுரியா (10) ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். ஜப்பான் சார்பில் காசுகி நகானிஷி 2 (48, 59வது நிமிடம்), சாசகி (11) நம்பிக்கை தந்தனர்.
இதுவரை ஒரு வெற்றி, ஒரு 'டிரா' என, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள இந்தியா, நாளை நடக்கவுள்ள 3வது போட்டியில் தென் கொரியாவை சந்திக்கிறது.
மேலும்
-
அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை
-
போட்டி தேர்வுக்கு தயாராகலாம்
-
டில்லியில் அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; உரிமையாளர் மீது வழக்கு
-
வருங்கால சந்ததியினர் மீது எனக்கு அதிக நம்பிக்கை; லண்டனில் மோகன் பாகவத் பேச்சு
-
புளோரிடாவில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற சரக்கு விமானம்; 5 பேர் பலி
-
புதிய உச்சத்தை எட்டிய இந்தியா-பிரான்ஸ் உறவுகள்; பாரிஸ் கோவில் திறப்பு விழாவில் மோடி பெருமிதம்