ஒகேனக்கல்லில் வனக்குழு கூட்டம்
ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் ஊட்டமலை திட்ட கிராமம் சார்பில் வனக்குழு கூட்டம் நடந்தது. ஒகேனக்கல் வனச்சரகர் சிவக்குமார் தலைமை வகித்தார். வனக்குழு தலைவர் குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஊட்டமலை திட்ட கிராமத்தில் வசிக்கும் பொதுமக்-களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்-பட்டது. குறிப்பாக, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மேல்-நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க இடவசதி ஏற்படுத்துதல், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த வனத்துறை சார்பில் படிப்பகம் அமைத்தல், நீண்ட நாள் கோரிக்கையான சமுதாயக்-கூடம் அமைத்தல் உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சினி அருவி நடைபா-தையை சீரமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்-டன. இதில், வனக்குழு உறுப்பினர்கள், வனத்துறை பணியா-ளர்கள் மற்றும் திட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உள்-ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.