குழாய் உடைந்து குடிநீர் வீண்

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, தண்டுகாரம்பட்டியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வயல்வெளிகளில் வீணாக வெளியேறி வருகிறது.


தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கெங்கலா-புரம் -சாமிசெட்டிப்பட்டி நெடுஞ்சாலையில் ஏலகிரி, சாமிசெட்-டிபட்டி, கொப்பக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஒகே-னக்கல் கூட்டு குடிநீர் குழாய் உள்ளது. இதில், பாகலஹள்ளி பஞ்., தண்டுகாரம்பட்டி உச்சிமரம் பஸ் ஸ்டாப் பகுதியில் கடந்த, 6 மாதங்களுக்கு முன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வந்-தது. அதை குடிநீர் பராமரிப்பு குழு அலுவலர்கள் கண்டுகொள்-ளாததால், குடிநீர் விவசாய நிலங்களில் வீணாக வெளியேறி வரு-கிறது. தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்-டுப்பாடு அதிகளவில் உள்ள நிலையில், வீணாக குடிநீர் வெளி-யேறுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த, 6 மாதமாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதால், குடிநீர் வெளியேறி வீணாகி வருவதாக, பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

Advertisement