மிகவும் சேதமடைந்த பனஞ்சிரா சாலை வானங்களை இயக்குவதில் சிரமம்
பந்தலுார்: பந்தலுார் அருகே எருமாடு -கோட்டூர் சாலை குழிகளாக மாறி உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் மற்றும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக–கேரளா எல்லை பகுதியாக, பந்தலுார் அருகே எருமாடு பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள வருவாய் அலுவலகம் அருகில் இருந்து, மாநில எல்லை பகுதியான கோட்டூர் பகுதிக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு சொந்தமான இந்த சாலையில், எருமாடு, பனஞ்சிரா, மராடி, மணல் வயல், புளிங்குன்னு உள்ளிட்ட, 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், மாநில எல்லை சோதனை சாவடிகளான கோட்டூர் மற்றும் தாளூர் பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டுனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வழியாக தனியார் மினி பஸ்சும் இயக்கப்பட்டு வருகிறது. சாலை சீரமைத்து பல ஆண்டுகள் கடந்த நிலையில், சாலையில் பெரும்பாலான இடங்களில் பெரிய அளவிலான, குழிகள் ஏற்பட்டு உள்ளதால், இந்த வழியாக இயக்கப்படும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து நிற்பதுடன், தனியார் மற்றும் அரசு பள்ளிகள், தனியார் கல்லுாரிகளுக்கு இயக்கப்படும் பஸ்களும் பழுதடைகிறது. சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி, உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் வரை கிராம மக்கள் மனு கொடுத்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
எனவே, சேதமான சாலை முழுமையாக காணாமல் போகும் முன்னர், சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ.59 லட்சம் வர்த்தகம்
-
கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
-
நாளை (செப். 10) மின்தடை
-
விபத்தில் வாலிபர் பலி
-
ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்பங்கேற்க ராமநாதபுரத்தில் 47,098 பேர் பதிவு