அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
சென்னை: சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ ஜெகதீஸ்வரி, தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். தற்போது, சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக கார் மூலம் சென்னை வந்தார்.
அரசு வாகனத்தில் அவர் வந்த நிலையில், அவரது சொந்த காரில் குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். அப்போது, சென்னை காட்டாங்குளத்தூர் அருகே குடும்பத்தினர் பயணித்த அமைச்சர் ஜெகதீஸ்வரின் பெயரில் உள்ள கார், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் இறையன்பு,29, என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அமைச்சரின் காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் அமைச்சர் ஜெகதீஸ்வரி சென்ற அரசு வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த அவரது சொந்த கார் பைக் மீது மோதிய விபத்தில், இறையன்பு (26 வயது) உயிரிழப்பு
நேரம். சரியில்லை. எப்படியும் பதவி நீக்கம் செய்யப்போறாங்க. நெனச்ச வேலைய செய்யலாம்.
இறையன்பு கனவுகள் காலி
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ள ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே ஆராயந்துபார் மனக்கண்ணுக்குள்ளே ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே எனும் பாடல் வரிகள் ஞாபகம் வருது இவர்கள் ஆட்டம் எல்லாம் டிசம்பர் மாதத்துக்குள் முடிவுக்கு வரும்
மூடி மறைக்கப்படும். வழக்கு இல்லாமல் பார்த்து கொள்வார்கள்.மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்