தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்

6


சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு 'தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்' என்ற புதிய திட்டத்தைத் துவங்க தயாராகி வரும் நிலையில், இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற நகைக்கடை நிறுவனங்கள் தங்கள் கடையில் இருந்து பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளன.

'அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்' என, முதல்வர் விஜய் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பாக, ஆண்டுக்கு 4.41 லட்சம் குழந்தைகளுக்கு, தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி துவங்குகிறது; இந்த திட்டத்தில் தயார் செய்யப்படும் தங்க மோதிரங்களை இருப்பு வைப்பதற்காக மாநிலத்தில் 107 மையங்களில், அனைத்து நவீன அம்சங்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 2,560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற நகைக்கடை நிறுவனங்கள் தங்கள் கடையில் இருந்து பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளன.

இது குறித்து ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநர் கூறியதாவது: நான்கு கட்டங்களில் முதல் கட்டமாக, 89,955 மோதிரங்களைத் தயாரித்து வழங்குவதற்கான பொறுப்பு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரங்கள் இத்திட்டத்திற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பைகளில், 'தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்' என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவையில் உள்ள எங்கள் இரண்டு பிரத்யேக மையங்களில் பேக்கிங் செய்து அனுப்பும் பணி துவங்கியது. வணிக ரீதியாகப் பார்க்கும்போது, ​​தற்போதைய சந்தை விலையிலேயே அரசு தங்கத்திற்கான தொகையைச் செலுத்துகிறது; அதேவேளையில், மோதிரங்களை உற்பத்தி செய்தல், ஹால்மார்க் (தரச் சான்று) முத்திரையிடுதல், பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவை எங்கள் பொறுப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement