பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்
சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலக கட்டடம் , சென்னை பட்டினப்பாக்கத்தில் 25.16 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கிறது. இதற்கான, அனுமதியை வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, முதல்வர் அலுவலகம், தலைமை செயலகம் மாற்றத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் சட்டசபையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்று அறிவித்த முதல்வர் விஜய், தற்போதைய தலைமை செயலகமாக செயல்படும், புனித ஜார்ஜ் கோட்டை பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
புதிய தலைமை செயலகம் எங்கு அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது, அதற்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பட்டினப்பாக்கம் எனப்படும் போர்ஷோர் எஸ்டேட்டில் சுமார் 25.16 ஏக்கரில் புதிய தலைமை செயலகத்தை கட்டுவதற்கு, தமிழக வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருவாய்த்துறைக்கு சொந்தமான கூடுதல் நிலங்களுடன் சேர்த்து மொத்தம் 26.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட இருப்பதாகக் கூறுகின்றனர். இதையடுத்து, விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்தக் கட்டடம், 15 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. இதன் மதிப்பு ஒரு சதுர அடி 22,000 வீதம், மொத்தம் ரூ.2,047 கோடியாக உள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இந்தப் பகுதியில் இருந்து, சாந்தோம் முக்கிய சாலையை எளிதில் அணுக முடியும்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "புதிய தலைமை செயலகம் அமைக்க தமிழக அரசு 3 இடங்களை பரிசீலனை செய்தது. போர்ஷோர் எஸ்டேட் (பட்டினப்பாக்கம்), கிண்டியில் உள்ள தேசிய ஆராய்ச்சி நிலையம், நந்தம்பாக்கத்தில் உள்ள பின்டெக் சிட்டி அருகே உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டன. இதில், 25 ஏக்கர் நிலத்தைக் கொண்ட பட்டினப்பாக்கம் சிறந்த இடமாக உள்ளது," என்றனர்.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இந்த இடம், 1958ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, சுமார் 1963 முதல் 1998 வரையில் சுமார் 1,380 அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை தற்போது சிதிலமடைந்ததால், அதனை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
பெயர் வந்தது எப்படி?
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குறிப்பிட்ட இந்த பகுதி, போர்ஷோர் எஸ்டேட் என்று அழைக்கப்பட்டது. கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதி என்ற பொருளில் இந்த பெயர் இருந்தது. அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அதை முன்னிட்டு ஆங்கிலத்தில் இருந்த ஊர் பெயர்கள் பல தமிழில் மாற்றப்பட்டன. அப்போதுதான் இந்த பகுதிக்கு பட்டினப்பாக்கம் என்று பெயர் சூட்டப்பட்டது
வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு . இருக்கும் கடனை முதலில் தீர்க்க வழி செய்யுங்கள் . கடன் வாங்கிக்கொண்டே இருந்தால் மக்கள் வரிச்சுமை கூடும் . புதிய தலைமைச்செயலகம் தேவை இல்லை .
இப்போது உதேசிதுள்ள இடத்துக்கு எதிரில் தொல்காப்பியர் பூங்காவில் உள்ள 350 ஏக்கரில் 50 ஏக்கர் எடுத்து புதிய செயலகம் அமைக்கலாம் கடலையும் பார்க்கலாம் இழப்பீ டும் கொடுக்க வேண்டாம்
இப்போது உதேசிதுள்ள இடத்துக்கு எதிரில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் உள்ள 350 எக்கரில் 50 ஏக்கர் எடுத்து புதிய செயலகம் அமைக்கலாம் கடலையும் பார்க்கலாம் இழப்பீடு கொடுக்க வேண்டாம்
பட்டனப் பாக்கத்தில் , சாலை குறுகலானது அகலப் படுத்த வாய்ப்பு குறைவு.
முதல்வர் வீஜய்க்கு கடற்கரை கடல் அலை மீதான விருப்பம் அதிகம் போல... 4 வருடத்தில் கட்டி முடிக்க முடியுமா?விடுவார்களா?
இ ப்போது உதேசிதுள்ள இடத்துக்கு எதிரேலேயே உள்ள தொல்காப்பியர் பூங்காவில் உள்ள 350 ஏகரில் 50 ஏக்கர் எடுத்து புதிய செயலகம் அமைக்கலாம் எழப்பீடு எதுவும் கொடுக்கவும் வேண்டாம் கடல் அழகையும் காணலாம்
நல்ல துவக்கம். சாத்தியமே. மெட்ரோ ரயில் பட்டினப்பாக்கம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். கடற்கரையோர லூப் சாலையில் மீன் கடைகள் சாலையிலிருந்து அங்காடிக்கு இடம் பெயர வேண்டும். சாந்தோம் சாலையில் உள்ள பள்ளிகளுக்கு மாற்று வழி அமைக்க வேண்டும். மேலும் சாந்தோம் சாலையை, இரு புறமும் நிலத்தை கையகப்படுத்தி, 8-வழி சாலையாக அகலமாக்க வேண்டும். இதற்க்கான செலவையும் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
விஜய் சிந்திக்க வேண்டிய கேள்வி
தமிழ்நாட்டின் கடன் சுமையில் புதிய செயலகம் தேவையா?
தமிழ்நாடு இன்று மிகப்பெரிய நிதிச்சுமையை எதிர்கொண்டு வருகிறது. அரசு வருவாயில் கணிசமான தொகை கடன் மற்றும் அதற்கான வட்டி செலுத்துவதற்கே செல்கிறது, இந்த சூழ்நிலையில், புதிய தலைமைச் செயலகம் அல்லது மிகப்பெரிய அரசு நிர்வாகக் கட்டிடம் அமைப்பதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுவது உண்மையில் தேவையா?
விஜய்யிடம் சில நேரடியான கேள்விகள்:
1. தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டிருக்கும்போது புதிய செயலகத்திற்கு இவ்வளவு பெரிய முதலீடு தேவையா?
2. அந்தப் பணத்தை அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், விவசாயம், குடிநீர், சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புக்கு பயன்படுத்த முடியாதா?
3. ஏற்கனவே உள்ள அரசு கட்டிடங்களை நவீனப்படுத்தி பயன்படுத்த முடியாதா?
4. புதிய கட்டிடம் கட்டுவதால் பொதுமக்களுக்கு கிடைக்கும் நேரடி நன்மை என்ன?
5. ஒரு புதிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு, புதிய கட்டிடங்களா முக்கியம்? அல்லது புதிய நிர்வாக முறையா முக்கியம்?
முக்கியமான சிந்தனை
ஒரு நல்ல அரசு என்பது பெரிய கட்டிடங்களை கட்டுவதால் மட்டும் உருவாகாது, குறைந்த செலவில் சிறந்த நிர்வாகம், ஊழல் இல்லாத ஆட்சி, விரைவான அரசு சேவை, விவசாயிக்கு பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மக்களுக்கு தரமான மருத்துவம் மற்றும் கல்வி — இவையே நல்ல ஆட்சியின் அடையாளங்கள், எனவே, தமிழகத்தின் எதிர்கால அரசியல் தலைமையாக தன்னை முன்னிறுத்தும் விஜய், புதிய செயலகம் போன்ற பெரிய திட்டங்களை ஆதரிப்பதற்கு முன் ஒரு கேள்வியை மக்களிடம் கேட்க வேண்டும், தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலையில் இது உண்மையிலேயே அவசியமான செலவா?
மக்களின் பணம் — மக்களின் முன்னுரிமைக்கே
கட்டிடம் முக்கியமா? மக்களின் வாழ்க்கை முக்கியமா?
இந்தக் கேள்விக்கு விஜய் அளிக்கும் பதில், அவரது அரசியல் முன்னுரிமையை வெளிப்படுத்தும்.
தமிழ்நாடு கடனில் இருக்கும்போது,
ஒவ்வொரு ரூபாயும் எங்கு செலவிடப்படுகிறது என்பதை மக்கள் கேட்கும் உரிமை பெற்றவர்கள்.
விஜய் சிந்திக்க வேண்டும்.
மக்களும் சிந்திக்க வேண்டும், தமிழ்நாட்டின் எதிர்காலம் பற்றி முடிவு செய்ய வேண்டிய நேரம் இது இதை இன்னும் தாக்கம் அதிகமாக இருக்கும் வகையில் “விஜய்க்கு 10 கேள்விகள்” என்ற தலைப்பில் ஒரு அரசியல் போஸ்டர் வடிவத்திலும் உருவாக்கலாம்.
திருட்டு திமுகவின் 2.0 அரசு இது
அப்படியாவது இதுகள் போய் தொலையட்டும்
துப்பாக்கி இப்போதுதானே கையில எடுதுருக்கிறார் எஸ் வி எஸ் கூடிய சீக்கிரம் குருவியை சுடுறமாதிரி உன்ன மாதிரி கேசுகளை சுட்டு பிடிக்க உத்தரவு வரும் நாளைய தீர்ப்பை இன்றே எதிர்பார்த்தால் எப்பிடி??மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி