குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
சென்னை: குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்த அரசின் நிலைப்பாடு என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை, மூன்று நாட்கள் அரசு விடுமுறைக்கு பின், இன்று கூடியது. முதல்வர் விஜய் அளித்த பதிலுரை பின்வருமாறு: சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை; சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடு வரும், தொழில்கள் முறையாக நடைபெறும். சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும்.
அரசின் நிலைப்பாடு
முதல்வர், அமைச்சர், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் போலீசாரின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் தலையீடு இருக்க கூடாது என வலியுறுத்தி உள்ளேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்த அரசின் நிலைப்பாடு.
இதுதான் அரசியலா?
சில தினங்களுக்கு முன் உறுப்பினர் பேசும் போது, ஏதோ எலும்பு டாக்டர் மாதிரி சட்டசபைக்குள் எலும்பை உடைப்பாராம்; இது மாதிரியான பேச்சு எல்லாம் எதற்கு? இதுதான் அரசியலா? இப்படி எல்லாம் பேசி, பேசிதான் மக்கள் எல்லாம் அதை பார்த்து, பார்த்து தான் எல்லாம் அந்த சைடு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
நான் ஒன்றும் அவர்களுக்கு அட்வைஸ் செய்ய வரவில்லை. இதுதான் ரியாலிட்டி. இன்னொரு திமுக மூத்த உறுப்பினர் பேசும் போது, மக்கள் அவர்கள் கட்சிகளுக்கு ஓட்டு போடாத காரணத்தினால், மக்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராதாம். எனக்கு சத்தியமாக புரியவில்லை; கடந்த 50 வருடமாக இதே மக்கள் தான் அவர்களுக்கு ஓட்டு போட்டு கொண்டு இருந்தார்கள்.
மக்கள் தீர்ப்பு
மக்களை பார்த்து எப்படி அந்த வார்த்தை வாயில் இருந்து வருகிறது என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் மனது எப்பொழுது இல்லையோ, இவர்கள் எல்லாம் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என்ற கேள்வி தானே வரும். மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆபாச நதி, வன்ம நதி பேச்சுகளை பல ஆண்டுகள் அரசியலில் இருக்கும் பெரியவர்கள் அந்த காலத்தில் பேசாத பேச்சா என்று கூறி நியாயப்படுத்துகின்றனர்.
அந்த கால அரசியலில் இருக்கும் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஏதுக்கு அவதூறாக, அசிங்கமான அரசியல், துருப்புடித்து போன அரசியல் நமக்கு ஏதுக்கு? நம்ம நண்பர்கள் எது பேசினாலும், நாங்கள் மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கின்றனர். எல்லோருக்கும் மிசாவை பற்றிய வரலாறு தெரியும். நடந்தது, நடக்கிறது, நடக்க போவது எல்லாம் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
இது தான் திமுக!
திமுகவினர் குறித்து கண்ணதாசன் மிக சுருக்கமாக சொன்னார். "பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை'', இது தான் திமுக. நமது அரசு யாருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளமாக இருக்காது. நமது அரசின் அடையாளம், தமிழ், தமிழர், தமிழ்நாடு அவ்வளவு தான். தமிழகம் தான் என் வீடு; 8 கோடி மக்கள் தான் என் சொந்தம். அவர்களின் அடையாளமாக தான் நமது அரசு எப்பொழுதும் இருக்கும்.
எம்ஜிஆர் பாடல்!
மக்கள் நலன், மக்கள் நலன் என்றே சொல்வார்; தன் மக்கள் நலன் ஒன்றே கருத்தில் கொள்வார் என்று எம்ஜிஆர் ஒரு பாட்டு ஒன்று பாடி இருக்கிறார். அதை மாற்றி கொஞ்சம் சொல்கிறேன். மக்கள் நலன், மக்கள் நலன் என்றே சொல்வோம். தமிழக மக்கள் நலன் ஒன்றே தான் கருத்தில் கொள்வோம். இப்படி நாம் இருக்கும் போது, அதனால் தான் நாங்கள் சொன்னோம். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பணத்தை கூட தொடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்.
குற்றப்பட்டியல்
கடைசி வாரம் பேசும் போது என் மேசையில் 3 துறை பைல் இருக்கிறது, அதனை எப்பொழுது ஓபன் பண்ண வேண்டுமோ, அப்பொழுது ஓபன் பண்ணுகிறேன் என்று சொன்னேன், உடனே எதிர்க்கட்சியினர் சவால் விடுத்தனர், அதனை ஓபன் செய்வதற்கு முன் தற்போது ஒரு சின்ன சேம்பிள் பார்ப்போம் என கூறி, திமுக ஆட்சி மீது முதல்வர் விஜய் குற்றப்பட்டியல் பின்வருமாறு:
* 1970களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு 2.5 சதவீதம் கமிஷன் தருமாறு கருணாநிதி மருமகன் கமிஷன் கேட்டுள்ளார்.
* கட்சி நிதி என்ற பெயரில் ஆட்சியில் திமுக இருந்த போது வாங்கியது. ஸ்டாலின், உதயநிதி மூலம் பெற்றனர் என்றும் அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அரசு ஒப்பந்தங்களுக்கு 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் லஞ்சமாக பெற்றனர்; பார் உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றனர்.
* தப்பில் இருந்து மாட்டிக்கொள்ளாமல் தப்பு செய்பவர்கள் திமுக; திமுக இருக்கும் இடத்தில் தப்பே நடக்கும், தப்பு நடக்கும் இடத்தில் திமுக இருக்கும்.
* செய்யும் தவரையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்.
* கரூர் கேங்க் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆவலாக உள்ளன.
* குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?
* திமுக ஆட்சியில் திமுகவினர் தொடர்புடைய குற்றங்களில் எப்ஐஆர் பதிவு செய்வதில் கூட தாமதம் செய்யப்பட்டது.
* பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
* பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகர், மனைவி மீது நடவடிக்கை இல்லை.
* கடலுார் திமுக எம்.பி., ரமேஷ் ஆலையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் கடுமையான கண்டனம் எழுந்தபிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
ஆபாச நதி!
சட்டசபையில் முதல்வர் விஜய் வைத்த வேண்டுகோள்:
* கருத்துரிமை, பேச்சுரிமையை சரியான முறையில் எந்த அளவுக்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். அரசியல் ரீதியாக என்ன வேண்டுமானாலும் கடுமையான விமர்சனங்ளை செய்து கொள்ளலாம். அதனை மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். யார் கருத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
எதனை விட்டுவிட வேண்டும் என்பதை மக்கள் பார்த்து கொள்வார்கள். அரசியலுக்கு தனிப்பட்ட முறையில் பெண்கள், மக்கள் மற்றும் யாரையும் தரம் தாழ்த்தி பேசுவது வேண்டாம். சமீப காலமாக தமிழகத்தில் ஆபாச நதியாக ஓடிக் கொண்டு இருக்கிறது. வன்ம நதியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நதிகள் எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
அசிங்கமாக பேசினால்...
பெண்களை பற்றி, அவதூறாக, அசிங்கமாக, டபுள், டிரிபுள் மீனிங்கில் பேசுவது எல்லாவற்றையும் மக்கள் வாட்ச் செய்து கொண்டு இருக்கிறார்கள். நமது வீட்டில் தாயாக, ஒரு அக்காவாக, தங்கையாக கூட இருப்பதும் அதே பெண்கள் தான். அதனை மனதில் வைத்து கொண்டு எல்லோரும் சரியாக பேசினால் நன்றாக இருக்கும்.
தெளிவாக இருக்கிறேன்
பெண்களை பற்றி யாராவது அவதூறாக, அசிங்கமாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும். யாராவது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் நான் பேசுவதாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பு ஆக முடியாது. அந்த எண்ணத்தில் நாம் அரசியலுக்கு வரவில்லை. அது அவசியமும் இல்லை.
இதே சட்டசபையில் எதிர்க்கட்சியினரால் ஜெயலலிதா மேடம் ஒரு பெண்ணாக எவ்வளவு அவமானங்களை சந்தித்து இருக்கிறார்கள் என்பதை நாம் கேள்விப்படுகிறோம். வருங்காலத்தில் அது எல்லாம் எந்த பெண்களுக்கும் நடந்து விட கூடாது என்பது ரொம்ப தெளிவாக இருக்கிறேன்.
பேச்சுரிமை
தொழில்நுட்பம், நாகரிகம் எல்லாம் வளர்ந்து போய் கொண்டு இருக்கிறது. அரசியல் ரீதியாக என்ன வேண்டும் என்றாலும் கமென்ட் செய்து கொள்ளலாம். அதில் தப்பு இல்லை. அதுதான் கருத்துரிமை, பேச்சுரிமை. இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
@block_B@
மேலும் முதல்வர் விஜய் பேசுகையில், '' தவெகவினர் தவறு செய்தாலும் பாரபட்சம் இன்றி இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், திமுக ஆட்சியில் திமுகவினர் அனுமதி பெற்ற பிறகே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றங்களில் தொடர்புடைய பலர், திமுக ஆட்சியில் காப்பாற்றப்பட்டனர். சட்டம் ஒழுங்கு சீரழிவு பற்றி பேசும் முன் திமுகவினர் கண்ணாடியை பார்த்துக் கொள்ள வேண்டும்; திமுக செய்த தவறுகளை மக்கள் மறந்துவிடவில்லை. தமிழக மக்களின் நினைவாற்றல் மிகவும் வலிமையானது,''என்றார்.block_B
@block_P@
முதல்வர் விஜய் பேசும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். வெளிநடப்பு செய்யாமல், அவைக்குள் இருந்தபடி ஆளுக்கு ஒரு பக்கம் கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர். அதற்கு மத்தியில் தான் முதல்வர் விஜய் பேசினார். இதை கடைசியில் பேசிய சபாநாயகர் குறிப்பிட்டு திமுகவினரை கண்டித்தார். சட்டசபையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் பிரபாகர் உத்தரவிட்டார்.block_P
திமுக வெளிநடப்பு
சட்டசபையில் கூச்சல் குழப்பம் செய்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவை முன்னவரான அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள், சபாநாயகரை முற்றுகையிட்டும் அவையில் தர்ணா செய்தும் போராட்டம் நடத்தினர்.
தங்களுக்கு பேச வாய்ப்பு கேட்டனர். அப்போது முதல்வர் எழுந்து, அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுங்கள் என்று கூறினார். அதை ஏற்ற சபாநாயகர் பேசும் வாய்ப்பு தருவதாக கூறினார். இதையடுத்து திமுகவினர், எழுந்து அவரவர் இடங்களுக்கு சென்றனர். அப்போதும் திமுகவினர் சிலர் எழுந்து நின்று கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர்.
சபாநாயகருடன் வாக்குவாதம் செய்தபடி இருந்தனர். இதனால் சபாநாயகர், திமுகவினருக்கு வாய்ப்பு கிடையாது என்று கூறி, வனத்துறை அமைச்சரை பேச அழைத்தார். இதை தொடர்ந்து திமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
பிரத்யேக வீடியோ!
சட்டசபையில் முதல்வர் விஜய் ஆவேச பேச்சு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேச்சைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்
அதென்னமோ தெரியல நம்ம இந்த நடிகர் விஜய்க்கு ஏன் இப்படி முரட்டு முட்டு
1967 முதல் தற்போதைய காலம் வரை அரசியல்வாதிகள் சேர்த்த சொத்து விபரம் பற்றி வெளிக்கொணர அரசு உதவிட வேண்டும். முதல் கட்டமாக தற்போதைய சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். சொத்து சேர்ந்த விதம் குறித்த விரிவான விசாரிக்க வேண்டும்
சி எம்விஜய் சிம்ட முழ அதிகாரம் பார்ட்டி பண்ட் கிடையாது என்ககறார்.தி நகர்பனகல் பார்க் ஜன நெரிசல் சாரதா வித்யாலயாபக்கம் சரவனா எழுப்பும் கட்டிடத்திற்கு யார் விரைவாக அனுமதி கொடுத்தனர்...துரைசாமி சப் வே 35 அடி ரோடு யார்போத்தீஸ் பெரும் 20 மாடிகட்ட அனுமதி கொடுத்தனர்..சென்னை 5 மாடி மேல் சென்றால் ரோடு அகலம்60அடி இருக்க வேண்டும்.இங்கு குறிப்பிட்ட இடங்கள்மிக குறுகலானவை..கேன்சல் செய்யுங்கள்
யோக்கியன் வர்றான்... சொம்ப எடுத்து உள்ளே வை...ங்ற கதையா...? நீங்கதானே சிஎம்... “நல்லா வாயில வந்துரும்”.. பேசுன ஆளு..? உங்களுக்கு வாயில வந்ததை எதிர் தரப்பினருக்கும் நல்லா வாயில வரும் இல்லையா...? அது சரி... எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் நடவடிக்கை... நேத்துதான் பார்த்தேன் தூத்துக்குடியில் தன்னை பாலியல் புகார் அளித்தவரே “சமாதானம்” “சமரசம்”...னு சொல்லி வழக்கை வாபஸ் வாங்க வச்சிருக்கீங்களே... இதுதான் உங்க யோக்கியமான நடவடிக்கையா...? ஆமா... காவல்துறை மானியக் கோரிக்கை நடக்கும்போதே... உன் கட்சிக்காரனையே சென்னையில் நடுரோட்டில் வெட்டிக் கொல்கிறார்கள்.... இதுதான் சட்டம்-ஒழுங்கு சரி செய்தலா... அமைதிப் பூங்காவா...? அதுசரி... எதையெதை யார் யாரிடம் எதிர்பார்க்கணுமோ... அதையதைத்தான் எதிர்பார்க்க முடியும்...?
இதுவரை வழக்கு போட்டு இருக்காங்க ஆளுங்கட்சி மீது but நடவடிக்கை எடுக்க மாட்டேங்குறாங்க
அப்படி தான் சொல்வாங்க
முதல் நாள் தடை
அடுத்த நாள் தடை
நீக்கம் இதபத்தி
தெளிவுபடுத்து
மத்திய அரசு ஏஜென்சிகளால ய ஒன்னும் முடியல. இதுல............
டைம்பாஸ்
தவறான பேச்சு. சாலைகளும் ஆலைகளும், நெருக்கடியற்ற விரைவான விமான நிலையம் போன்றவையே , ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. சட்டம் ஒழுங்கு அதன் பின்னரே. சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்து சாலை வசதிகள் சரியாக இல்லையெனில் வளர்ச்சி சாத்தியம் இல்லை. தவறான அரசியல் நாட்டின் வளர்ச்சியை கெடுக்கவே செய்யும்.அண்ணாமலை சாரிடம் அரசியல் எந்த நாட்டில் படிக்கலாம் என கேட்டு அரசியல் படிப்பதே சாலச்சிறந்தது.
உங்க கட்சி எம் எல் ஏ மீது பாலியல் குற்றசாட்டை உங்க கட்சி பெண் நிர்வாகியே சொல்லிய பிறகும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை...மேலும்
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
-
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்
-
அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை
-
போட்டி தேர்வுக்கு தயாராகலாம்