வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு

2


சென்னை: சென்னையில் வார தொடக்க முதல் நாளான இன்று (செப் 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 14,130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (செப் 5) தங்கம் விலை கிராமுக்கு, 170 ரூபாய் குறைந்து, 14,190 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,360 ரூபாய் சரிவடைந்து, 1,13,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி விலை கிராம் 255 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (செப் 06) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. முந்தைய நாளில் விற்பனை செய்யப்பட்ட விலையில் விற்கப்பட்டது.


இன்றைய நிலவரம்




இந்நிலையில் வார தொடக்க முதல் நாளான இன்று (செப் 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 14,130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி நிலவரம்




வெள்ளி விலை மாற்றிமின்றி ஒரு கிராம் ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement