கரூர் கேங்கின் தலைவன் யார்; அறிந்து கொள்ள மக்கள் ஆர்வம்- முதல்வர் விஜய்

9

சென்னை: கரூர் கேங்கின் தலைவன் யார் ? அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர் என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.


சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது: செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், டாஸ்மாக் போக்குவரத்து டெண்டர்களில் தலையிட்டதாகவும், மோசடி, முறைகேடு மற்றும் சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. இதனை ஒருங்கிணைத்ததே அவர்கள் தான் எனவும் கூறியுள்ளது.


கடந்த ஒரு தசாப்தமாக நடந்ததாக கூறப்படும் நிதிமுறைகேடுகள் 2021 முதல் 2025 வரை காலகட்டத்தில் பல மடங்கு அதிகரித்ததாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.திமுக எதை செய்தாலும் குடும்பமாக சேர்ந்துதான் செய்வார்கள்.


இதில் மற்றொரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அமலாக்கத்துறை அறிக்கையில் கோவை, கரூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்த அரசியல் பிரமுகர்கள், பார் உரிமையாளர்களிடம் கட்சி நிதி என்ற பெயரில் வற்புறுத்திப் பணம் வசூலித்தாகவும், அவர்கள் கரூர் கேங் எனக் குறிப்பிட்டுள்ளது. கரூர் கேங் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த கேங்கின் தலைவன் யார் . நமக்கேஇவ்வளவு ஆர்வம் உள்ளதே. மக்களுக்கு எப்படி இருக்கும்.


அதேபோல் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகை வசூலித்தது தொடர்பாக '' கடந்த 2021 முதல்2025 வரை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில்( In an organised Manner) , வாடிக்கையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது'' என்று அமலாக்கத்துறை எனத் தெரிவித்துள்ளது.
இதில் ' In an organiesed manner' என்ற வார்த்தையை குறிப்பாகக் கவனிக்க வேண்டும். தவறு செய்து மட்டும் அல்ல. சட்டவிரோதமாக செய்த செயல்களை கூட ஒழுங்காக, முறையாக, சரியாக செய்துள்ளனர். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

Advertisement