தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் என்‌‌.ஆர்.காங்.,-தி.மு‌.க.,- காங்., மும்மூனைப் போட்டி

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் தேதி வெளியானதால், வேட்பாளரை அறிவிக்க காங்., தி.மு.க., தயாராகிவிட்டது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி இரண்டு தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்று, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல், தமிழகம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில இடைத்தேர்தல் தேதியுடன் நேற்று வெளியானது. இடைத்தேர்தலில், மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்.- தி.மு‌.க.,(தனித்து) த.வெ.க.வுடன் உள்ள கூட்டணி கட்சிகளோடு காங்., ஆகிய மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றனர். இதனால் மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது. வரும் செப்.9ம் தேதி மனு தாக்கல் துவங்கி அக்.6ம் தேதி ஓட்டுப்பதிவு,அக்.9ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளதால், தேர்தல் தேதி வெளியாவதற்கு முன்பே, என்.ஆர்.காங்., வேட்பாளராக அசோக் ஆனந்தை கடந்த சனிக்கிழமையே முதல்வர் ரங்கசாமி அறிவித்துவிட்டார்.

த.வெ.க.- நே.ம.க. கூட்டணியில் காங்., வேட்பாளராக விநாயகம், தி.மு.க., சார்பில் சேது செல்வம் ஆகியோர் வேட்பாளராக களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது. தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், போட்டியிடும் த.வெ.க.,தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடாமல், காங்., கட்சி வேட்பாளரை ஆதரிக்கிறது.

அதனைத் தொடர்ந்து நேற்று டில்லியில் காங்., கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் புதுச்சேரி காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ,நேய மக்கள் கழக நேரு எம்.எல்.ஏ., ஆகியோர் சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்துள்ளனர். அதனால் நே.ம.க., வை சேர்ந்த விநாயகம் காங்., கட்சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

Advertisement