வெறி நாய்கள் தொல்லை
கீழக்கரை: ஏர்வாடி ஊராட்சி மற்றும் தர்கா சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் அதிகளவு வெறிநாய்கள் தொல்லை உள்ளன. கூட்டமாக திரியும் நாய்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், மக்களை விரட்டி கடிக்கிறது. பொதுமக்கள் கூறியதாவது:
ஏர்வாடி தர்கா அருகே உள்ள மீன் மார்க்கெட் மற்றும் கடற்கரை செல்லும் வழியில் ஏராளமான வெறி நாய்கள் கூட்டமாக பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. வீடுகளில் வளர்க்கக்கூடிய ஆடு, மாடுகளை சாலையில் அதிகளவில் விடுகின்றனர். இதனால் டூவீலரில் செல்வோர் அடிக்கடி தவறி விழுகின்றனர்.
எனவே ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்தினர் வெறி நாய்கள் மற்றும் இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ.59 லட்சம் வர்த்தகம்
-
கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
-
நாளை (செப். 10) மின்தடை
-
விபத்தில் வாலிபர் பலி
-
ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்பங்கேற்க ராமநாதபுரத்தில் 47,098 பேர் பதிவு
Advertisement
Advertisement