சாலைகள் படுமோசம் வாகன ஓட்டிகள் அச்சம்
காரைக்குடி, செப். 9 -
காரைக்குடி மாநகராட்சியில், தடுப்புச் சுவர் இல்லாமலும், சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சி 30வது வார்டில் பல வீதிகள் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு, புதிய சாலை அமைக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. கழிவு நீர் கால்வாயும் செடிகள் முளைத்து சாக்கடை நீர் செல்ல வழியின்றி கிடக்கிறது.
இந்நிலையில் கிணற்றடி காளியம்மன் வீதியில் பேவர் பிளாக் கல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய அகலமான கழிவுநீர் கால்வாய் செல்கிறது. கால்வாயில் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சாலையில் செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். அருகிலேயே பள்ளிகள், கோயில்கள் உள்ளதால் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்கள் அதிகம் பேர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சேதம் அடைந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
திடீர் தீ விபத்து: கடை எரிந்து சேதம்
-
வழக்கில் சேர்க்காமல் இருக்க பேரம்: அதிகாரிகளுக்கு 'டோஸ்' விட்ட எஸ்.பி.,
-
ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டி
-
வெளிநாட்டிற்கு அனுப்பும் போலி ஏஜன்ட்டுகள் குறித்து அறியாமை; கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
-
வெறி நாய்கள் தொல்லை
-
ரோட்டில் திரிந்த மாடுகளால் விபத்தில் சிக்கி பலி