திடீர் தீ விபத்து: கடை எரிந்து சேதம்
புவனகிரி: கடை தீ பிடித்து எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். .
புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர் பு.மணவெளியில், தனக்கு சொந்தமான நிலத்தில் கடை கட்டி ரவிச்சந்திரன் என்பவருக்கு குத்தகை விட்டிருந்தார்.
கடையில் வியாபாரம் இல்லாததால் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. அந்த கடையில், நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், கடையின் பின்னால், இருந்த அறையும் தீபிடித்து எரிந்தது. அதில், அந்த அறையில் வைத்திருந்த மரக்கட்டில், பிரிட்ஜ் மற்றும் வாஷிங்மிஷன் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலுமாக எரித்து சேதமடைந்தது. விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வழக்கில் சேர்க்காமல் இருக்க பேரம்: அதிகாரிகளுக்கு 'டோஸ்' விட்ட எஸ்.பி.,
-
ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டி
-
வெளிநாட்டிற்கு அனுப்பும் போலி ஏஜன்ட்டுகள் குறித்து அறியாமை; கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
-
வெறி நாய்கள் தொல்லை
-
சாலைகள் படுமோசம் வாகன ஓட்டிகள் அச்சம்
-
ரோட்டில் திரிந்த மாடுகளால் விபத்தில் சிக்கி பலி
Advertisement
Advertisement