கட்டண வசூலை கண்டித்து கையெழுத்து இயக்கம்

சேலம்: சேலம் மாநகராட்சி பழைய பஸ் ஸ்டாண்ட் உள்-ளிட்ட இடங்களில் உள்ள, சாலையோர வியாபா-ரிகளிடம் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது.

சேலம் கிழக்கு மாவட்ட மாநகர தலைவர் பிரபாகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி தலைமையில் சாலையோர வியாபாரிகளிடம் கையெழுத்து பெற்றனர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறு-கையில்,'சாலையோர வியாபாரிகளிடம் கட்-டணம் வசூல் செய்யும் பணியை, மாநகராட்சியே நடத்த வேண்டும். மாநகராட்சி அனுமதியின்றி கட்டணம் வசூல் செய்த 2 தனியார் ஒப்பந்ததாரர் மீதும், இதற்கு துணை போன அரசு அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்-றனர்.

Advertisement