போலீஸ் கமிஷனர் அனுமதி பெற்ற பின்னரே ஆர்ப்பாட்டம் நடத்தணும்

சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார், வெளியிட்ட செய்திகுறிப்பில்
கூறியிருப்பதாவது:


சேலம் மாநகரில் அரசியல் கட்சியினர், சங்-கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்-வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்-றவற்றை நடத்துவதற்கு பிரிவு, 41ல் தமிழ்நாடு காவல்துறை சட்டம், 1888ன் படி சேலம் மாநகர காவல் கமிஷனர் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும்.மேலும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த இருக்கும் தேதியில் இருந்து, 5 தினங்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்-பிட்ட கால அளவிற்கு பின் பெறப்படும் விண்-ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது. விளை-யாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம், மற்றும் மத நிகழ்ச்சிகள் போன்றவற்றிக்கு இது பொருந்தாது. இந்த நடைமுறை நேற்று நள்ளிரவு முதல் வரும் 21ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement