காங்., ஆலோசனை கூட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில், காங்., கட்சி சார்பில், மாவட்ட மறு சீரமைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. காங்., கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் ரகு தலைமை வகித்தார்.


இதில் மாநில நிர்வாகி சீனிவாசன் பேசும்போது, மறுசீரமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளை மாநில தலைவரின் ஆலோசனை மற்றும் மாவட்ட தலைவர் ஒப்புதலோடு பொறுப்புகள் மாற்றம் செய்து, மறுசீரமைப்பு நடக்கும். பல்வேறு கட்டமைப்பு மாற்றங்கள் நடக்கும், என்றார். கூட்டத்தில் வட்டார தலைவர்கள் ரவி மற்றும் அயோத்தி, தேசிய காரிய கமிட்டி உறுப்பினர் குமரேசன், நகர தலைவர் விஜயகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் பூபதி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்-டனர்.

Advertisement