தர்மபுரி - பென்னாகரம் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மக்கள் மறியல்
பென்னாகரம்: பென்னாகரம் - தர்மபுரி சாலை விரிவாக்க பணிக்-காக தோண்டப்பட்ட பள்ளம், 4 மாதங்களாக மூடப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் ஆத்-திர மடைந்த பொதுமக்கள், பி.அக்ரஹாரம் பகு-தியில் நேற்று, மறியலில் ஈடுபட்டனர்.
ஒகேனக்கல் சோதனைச்சாவடியில் இருந்து திப்-பட்டிபள்ளம் வரை, 14 கி.மீ., துாரத்திற்கு, 4 வழிச்-சாலையாக விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்-துறை சார்பில், 2 பேருக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடக்கிறது. ஆதனுாரிலிருந்து திப்பட்டி-பள்ளம் வரை நடக்கும் பணி நீதிமன்ற உத்தரவுப்-படி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பி.அக்ரஹாரம் பகுதியில் சாலையின் குறுக்கே கல்வெட்டு அமைக்க, 3 இடத்தில் பள்ளம் தோண்-டப்பட்டு கடந்த, 4 மாதங்களாக அப்படியே விடப்-பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், இரவில் பள்ளம் தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் பகலில் துாசி பறந்து அருகிலுள்ள வீடுகளுக்குள் புகுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவ-டிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் நேற்று பி.அக்ரஹாரம் பகுதியில் தர்மபுரி - பென்-னாகரம் சாலையில் அமர்ந்து, மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர். அவர்
களிடம் பென்னாகரம் போலீசார் மற்றும் நெடுஞ்-சாலை துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி தற்-காலிகமாக பள்ளம் மூடப்படும் என, தெரிவித்-தையடுத்து கலைந்து சென்றனர்.