விற்பனைக்கு பழைய மொபைல் வழங்குவதாக ரூ.1.12 லட்சம் மோசடி செய்தவருக்கு 'காப்பு'

ஓசூர்: விற்பனைக்கு பழைய மொபைல்போன்களை தருவதாக கூறி, 1.12 லட்சம் ரூபாய் மோசடி செய்த, சேலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்-பட்டார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே அத்தி-முகத்தை சேர்ந்தவர் சசிக்குமார், 28. ஓசூரில் தனியார் மொபைல் ஷோரூமில் பணியாற்று-கிறார். இவரும், சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே ஓலைப்பட்டியை சேர்ந்த அறிவழகன், 34, என்பவரும், பிரபலமான தனியார் ஷோரூமில் பணியாற்றிய போது பழக்கம் ஏற்பட்டிருந்தது. அறிவழகன் தற்போது, சேலம் மாவட்டம், தார-மங்கலத்தில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பழைய மொபைல்போன்கள் தன்-னிடம் இருப்பதாக அறிவழகன் கூறியதால், அதை வாங்கி விற்க சில நாட்களுக்கு முன், கியூ.ஆர்., கோடு மூலமாக, 1.12 லட்சம் ரூபாயை அவருக்கு, சசிக்குமார் அனுப்பினார்.
ஆனால், அறிவழகன் மொபைல்போன்களுக்கு பதிலாக, காகிதங்கள் மட்டுமே இருந்த பார்சலை, சசிக்குமாருக்கு அனுப்பினார். அதிர்ச்சியடைந்த அவர், அறிவழகனிடம் கேட்ட போது, தகாத வார்த்தையால் பேசி, மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நேற்று முன்தினம் சசிக்குமார் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார், அறிவழகனை கைது செய்தனர்.

Advertisement