ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்; பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!
நமது நிருபர்
ஹிந்து அமைப்பினர் வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப் பட்டதால் எழுந்த சர்ச்சை மற்றும் போராட்டத்தால் பிரான்சின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தை ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தனர். அப்போது அந்தத் குழுவினர் கோரியதாகக் கூறப்பட்டதால், நிர்வாகம் பெண் ஊழியர்களை அவர்களின் பணியிடத்தில் இருந்து சிறிது நேரம் விலக்கியது.
ஆண் ஊழியர்கள் மட்டும் குறிப்பிட்ட சில மணி நேரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாலின அடிப்படையில் பெண்களை ஒதுக்கியது ஏற்புடையதல்ல என்று கூறி ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.ஊழியர்கள் நடத்திய திடீர் வேலைநிறுத்தத்தால் ஈபிள் கோபுரம் தற்காலிகாக மூடப்பட்டது.
பிரான்ஸ் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.இந்த வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்ட ஈபிள் கோபுரம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈபிள் கோபுரத்தை நிர்வகிக்கும் 'SETE' நிறுவனம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பெண்களுடனான தொடர்பை குறைக்குமாறு, ஹிந்து அமைப்பின் குழுவினர் கோரிக்கை விடுத்தது உண்மை தான்; ஆனால் அந்த நிபந்தனையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்று கூறி தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது.
இறைவன் மிகப்பெரியவர்.இந்த ஒற்றை சொல்லே போதும்.
பெண்கள் நசுக்கப்படுகிறார்கள்....நாங்களெல்லாம் ரொம்ப நல்லவங்க என்று நாள்தோறும் கூப்பாடு போட்டவர்கள் வரிசையா வரவும்....மேலும்
-
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள், ஒரு மெழுகுவர்த்தி அகற்றிய டாக்டர்கள்!
-
பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு; புக்மைஷோவில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
-
கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடையும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
பயணிகள் கார் விற்பனையில் பெட்ரோல், டீசல் அல்லாத வாகன விற்பனை விஞ்சியது!
-
பண்டிகை கால தள்ளுபடிகள் தவிர்ப்பு? பரிசீலிக்கும் ஆடை விற்பனையாளர்கள்
-
புதிய பொலிவுடன் 'பலேனோ'