பண்டிகை கால தள்ளுபடிகள் தவிர்ப்பு? பரிசீலிக்கும் ஆடை விற்பனையாளர்கள்
புதுடில்லி: உற்பத்தி, போக்குவரத்து, பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நடப்பு பண்டிகை காலத்தில் ஆடை விற்பனை நிறுவனங்கள் அதிக தள்ளுபடிகளை வழங்குவதை தவிர்க்க முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன் கூறியதாவது:
ஆடை விற்பனை நிறுவனங்களின் வருவாய் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், அதிகரித்து வரும் செலவுகளால் லாப வரம்பில் அழுத்தம் ஏற்படும். மேலும், பண்டிகை காலத்தை எதிர்கொள்ளும் நிலையில், நாடு முழுதும் ஊழியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், கடைகளில் போதிய பணியாளர்களை நியமிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த முறை தள்ளுபடி வழங்குவதை முக்கிய விற்பனை உத்தியாக நிறுவனங்கள் பயன்படுத்தாது. அதற்கு பதிலாக, வித்தியாசமான மற்றும் புதுமையான பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதுடன், நேரடி கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்தும்.
எரிபொருள் விலை உயரும்போதும், வினியோக வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படும்போதும், கேரி பேக் உள்ளிட்ட முக்கிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், செலவுகளை கட்டுப்படுத்துவது சில்லரை விற்பனையாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
செலவுகளை கட்டுப்படுத்துவது சில்லரை விற்பனையாளர்களுக்கு பெரும் சவால் ஊழியர் தட்டுப்பாடு நிலவுவதால், போதிய பணியாளர்களை நியமிப்பதில் சிக்கல்
பெரிய நகைச்சுவை. விலையை ஏற்றி விட்டு தங்கள் மார்ஜின் குறையாமல் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி என்ற பெயரால் மக்கள் தலையில் மிளகாயை அரைப்பது.மேலும்
-
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ.59 லட்சம் வர்த்தகம்
-
கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
-
நாளை (செப். 10) மின்தடை
-
விபத்தில் வாலிபர் பலி
-
ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்பங்கேற்க ராமநாதபுரத்தில் 47,098 பேர் பதிவு