ஆதாரம் இருப்பதால் தான் முதல்வர் விஜய் பேசினார்; திமுகவுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி

17


சென்னை: சர்க்காரியா கமிஷன் குறித்து முதல்வர் பேசியது தவறு இல்லை; ஆதாரம் இருப்பதால் தான் முதல்வர் விஜய் பேசினார் என திமுகவுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் பிரபாகர் உத்தரவிட்டார்.

சட்டசபை இன்று (செப் 08) காலை கூடியதும் முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திமுக எம்எல்ஏ எவ வேலு பேசியதாவது: அமலாக்கத் துறை வழக்கு நிலுவையில் உள்ளது. இது குறித்து முதல்வர் சபையில் பேசியது மரபு மீறல். மிசா என்பது ஜனநாயகத்திற்கு எதிராக வந்தது. பலர் கைதானார்கள், அவையில் இல்லாத ஒருவர் குறித்து பேசுவது சரியல்ல, என்றார். எனவே இது தொடர்பான முதல்வர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்ய திமுக கோரிக்கை விடுத்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள ஆதாரத்தை குறிப்பிட்டு முதல்வர் விஜய் பேசினார். அவர் விசாரணை மற்றும் நீதிமன்றத்தை பற்றி பேசவில்லை; சர்க்காரியா கமிஷன் குறித்து இந்த அவையிலேயே எல்லாம் இருக்கிறது. இதை தானே பேசினார். சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கருணாநிதி எங்கெல்லாம் பணம் வாங்கினார் என்பது குறித்து இருக்கிறது.

கொடுக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் 6 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறது. அதன் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மிசா குறித்து நிறைய பேசப்பட்டுள்ளது. மிசா காலங்களில் திருட்டு வழக்கு, வழிப்பறி வழக்கு, பெண்கள் குறித்து வழக்கு கைது செய்யலாம். தேவையில்லாமல் பழையது எல்லாம் பேசி, நீங்கள் இன்னும் உங்கள் நிலை குறித்து தரம் தாழ்ந்து போய் கொண்டு இருக்கிறீர்கள்.

ஆபாச நதியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதனை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் விஜய் அவர்களுக்கு கண்ணியாக எடுத்துரைத்தார். அதை குறைத்துக்கொள்ள வேண்டும். இதே மாதிரி கத்திக்கொண்டே இருந்தால் உங்கள் நிலை குறித்து வெளிவரும். நேரலையில் போய் கொண்டு இருக்கிறது. இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.


திமுகவினர் அமளி




முதல்வர் விஜய் என்னிடம் முன்கூட்டியே ஆதாரத்தை காண்பித்தார். அவரது பேச்சில் எதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார். உடனே அவையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர்.

திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு சபாநாயகருக்கு அனை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார். பிறகு, ''திமுகவினர் அமைதியாக இருந்தால் பேச அனுமதி தருகிறேன்; மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்'' என சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.



@block_Y@

வெளியேற்ற உத்தரவு!

என் முன்னால் நின்று கொண்டு, சூழ்ந்து கொண்டு அவையை நடத்த விடாமல் தடுத்து கொண்டு இருக்கும் எம்எல்ஏக்களை வெளியேற்றும் படி அவை காவலர்களுக்கு சபாநாயகர் பிரபாகர் உத்தரவிட்டார். அமைதியாக போங்கள், அவை காவலர்கள் அமைதியான முறையில் வெளியேற்றும் படி ஜேசி பிரபாகர் வேண்டுகோள் விடுத்தார். block_Y


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

சட்டசபை இன்றைய கூட்டத்தொடர்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


நேரலை வீடியோ!

அமளி செய்த திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement