பள்ளிக்கல்வி டேபிள் டென்னிஸ் டான்போஸ்கோ பள்ளி முதலிடம்

சென்னை: சென்னை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், 17 வயது பிரிவு இரட்டையரில். கொளத்துார் டான் போஸ்கோ பள்ளி மாணவர்கள் முதலிடத்தை பிடித்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

பள்ளிக்கல்வி துறையின் சென்னை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, ராயபுரம் கலைமகள் வித்யாலயா பள்ளியில் நேற்று நடந்தது. போட்டியில், சென்னை மாவட்டத்தில் 23 மண்டலங்களில் வெற்றி பெற்ற பள்ளி அணிகள் பங்கேற்றன.

இரட்டையர் 17 வயது பிரிவில், திரு.வி.க., மண்டலம், கொளத்துார், சீனிவாசா நகர் டான்போஸ்கோ பள்ளி மற்றும் தண்டையார்பேட்டை மண்டலம், ராயபுரம் கலைமகள் பள்ளிகள் மோதின. இதில், 3 – 0 என்ற புள்ளிக்கணக்கில் டான்போஸ்கோ பள்ளி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களான லலித் பிரசாந்த், விஸ்வாசித் இருவரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதே வயது பிரிவில் தனிநபரில், நுங்கம்பாக்கம் சிந்தி மாடல் மாணவன் கமலேஷ், 3 – 0 என்ற புள்ளிக்கணக்கில், அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவன் நிதினை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

Advertisement