வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

போடி, செப். 9 -

வருசநாடு, மேகமலையில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. அதன் பின் போடி தாலுகா அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் போடி வழக்கறிஞர் சங்க துணை தலைவர் சின்னச்சாமி தலைமை வகித்தார். செயலாளர்கள் பாண்டியராஜ், குமார், ஒருங்கிணைப் பாளர் பால்பாண்டியன், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராதா கிருஷ்ணன் உட்பட வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement