3 நாட்களாக வீணாக ரோட்டில் ஓடும் குடிநீர்

மானாமதுரை, செப்.9-

மானாமதுரை நல்லாண்டிபுரம் அருகே கடந்த 3 நாட்களுக்கும் மேலாக ரோட்டிற்கு அருகே உள்ள குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

மானாமதுரையில் இருந்து

தெ. புதுக்கோட்டை வழியாக பரமக்குடி செல்லும் ரோட்டில் நல்லாண்டிபுரம் விலக்கு அருகே ரோட்டை ஒட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் செல்கிறது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குழாய் உடைந்து ரோட்டிலும் அருகில் உள்ள இடங்களிலும் தேங்கி வீணாகி வருகிறது.ே கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கோடை வெயில் கடுமையாக இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில் மழையும் பெய்யாத காரணத்தினால் நீர் நிலைகளிலும் தண்ணீர் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.த ற்போது 3 நாட்களுக்கும் மேலாக குடிநீர் குழாய் உடைந்து வீணாக குடிநீர் ரோட்டில் செல்வதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.அதிகாரிகள் உடனடியாக இதனை சரி செய்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement