தறி ஆடையகம் சார்பில்  மேற்படிப்பு  சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை  

நடுவீரப்பட்டு,செப்.9–

சி.என்.பாளையம் அரசுமேல்நிலைப் பள்ளியில் படித்து மேற்படிப்பு சேர்ந்துள்ள மாணவர்களுக்கு சென்னை தறி ஆடையகம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார். முன்னாள் பெற்றோர் கழக துணைத் தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற வெற்றிவேல் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கி பாராட்டினார்.

சென்னை தறி ஆடையகத்தின் நிறுவனர் சி.என்.பாளையம் சண்முகம் இப்பள்ளியில் கடந்த 2023–24 ம் கல்வி ஆண்டில் படித்து, நீட் தேர்வில் தற்போது 463 மதிப்பெண் பெற்று,பொதுபிரிவில் 492 இடத்தினை பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்று சென்னை தனியார் கல்லுாரியில் சேர்ந்துள்ள மாணவர் பிரசன்னாவை பாராட்டினார். மாணவரின் பெற்றோர்களை பள்ளிக்கு  வரவழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

மேலும் இப்பள்ளி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இன்ஜினியரிங் சேர்ந்துள்ள மாணவர்களான ஹரிஷ்குமார் ,பாலாஜி , காவ்யா, சாருமதி ஆகிய மாணவர்களையும் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

Advertisement