சிவகங்கையில் காப்பு கட்டுடன்விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்
சிவகங்கை, செப்.9-சிவகங்கையில் நகர் பா.ஜ., சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. சிவகங்கை நகரில் 17 இடங்களில் விநாயகர் சிலைகள் செப்., 14 ம் தேதி காலை 6:15 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தினமும் காலை, மாலை சிலைகளுக்கு அபிேஷக ஆராதனை நடைபெறும். சதுர்த்தி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பா.ஜ., நகர் தலைவர் உதயா, பொது செயலாளர் பாலா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செப்., 15 அன்று காலை 7:15 மணிக்கு சிவன்கோயில் முன் கோமாதா பூஜை,செப்.,16 மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, செப்.,17 அன்று இரவு 7:00 மணிக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறும். செப்., 18 அன்று மதியம் 3:00 மணிக்கு நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சிவகங்கை தெப்பக்குளத்தில் விஜர்சனம் செய்யப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement