மனைவியை காணவில்லை கணவர் போலீசில் புகார் 

காட்டுமன்னார்கோவில், செப். 9–

வீட்டில் இருந்த மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கொளக்குடி ரகமத் நகரைச் சேர்ந்த ஷாகுல் அமீது மகன் முகமது நிவாசுதீன்,29; லால்பேட்டையில் உள்ள ஓட்டலில் கேஷியராக வேலை செய்கிறார். இவருக்கு கடந்த 24ம் தேதி கடலுாரைச் சேர்ந்த முகமது ேஷக் மகள் தன்பிகா பீவி 18; என்பவருக்கும் திருமணம் நடந்தது. புது தம்பதிகள் இருவரும் கொளக்குடியில் தனி வீடு எடுத்து வசித்து வந்தனர். கடந்த 7ம் தேதி வழக்கம் போல் முகமது நிவாசுதீன் வேலைக்கு சென்றார். மனைவி தன்பிகா பீவி மட்டும் வீட்டில் இருந்தார். வேலை முடிந்து முகமது நிவாசுதீன் இரவு வீட்டிற்கு வந்த போது, மனைவி இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து, தன்பிகாபீவியை தேடிவருகின்றனர்.

Advertisement