கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம்
கரூர்:கரூர் அருகே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி செம்பாடம்பாளையத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதை கண்டித்து நேற்று காலை வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்
டானாவில், 100க்கும் மேற் பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், செம்பாடாம்பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கைவிடக்கோரி, கோஷம் எழுப்பப்பட்டது.
பிறகு, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், புகழூர் தாசில்தார் சத்தியமூர்த்தி, வேலாயுதம்
பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிட செய்தனர்.
பிறகு, பொதுமக்கள் புகழூர் நகராட்சி அலுவலகம் சென்று, ஆணையாளர் வெங்கடாஜலபதியிடம், செம்பாடாம்பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என கூறி விட்டு, கலைந்து சென்றனர். இதனால், புகழூர் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
ஈரானுக்கு உதவி செய்த 27 விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை
-
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் இருமடங்கு உயர்வு; ராஜ்நாத் சிங் பெருமிதம்
-
மேற்காசியாவில் தொடரும் பதற்றம்; ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
-
துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
-
வீட்டின் பூட்டை உடைத்து ரு. 20 ஆயிரம் திருட்டு
-
அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்