தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் விதிமீறல்; நிதியை வேறு பணிகளுக்கு திருப்பி விட்டது அம்பலம்!
சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் கடுமையான விதிமீறல்கள் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசின் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தொடர்பான மத்திய தணிக்கைக் குழு அறிக்கை வெளியாகி உள்ளது. நிதி வேறு தேவைகளுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது; அங்கீகரிக்கப்படாத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அனுமதிக்கப்பட்ட திட்டப் பணிகளை விடுத்து, மாநகராட்சி மின்சாரக் கட்டணம் செலுத்தவும், ஊழியர்களின் சம்பளம் வழங்கவும், சொகுசு கார்கள், கணினிகள் மற்றும் 110இன்ச் எல்இடி டிவிகள் வாங்கவும் ஸ்மார்ட் சிட்டி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை, சேலம் போன்ற நகரங்களில் ரூ.100 கோடிக்கும் மேல் செலவழித்து கட்டப்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் பல அடுக்கு வாகன நிறுத்தங்கள் லிப்ட் வசதிகள் இன்றி இன்னும் முழு பயன்பாட்டுக்கு வரவில்லை; 7 நகரங்களில் 2015-23ம் ஆண்டு காலகட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.1,602.2 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும் இத்திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. அதேவேளையில், ரூ.623.86 கோடி மதிப்பிலான 44 திட்டமிடப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில் அதிகபட்சமாகத் திட்டமிடப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; அங்கு ரூ.314.62 கோடி மதிப்பிலான 15 திட்டங்கள் இவ்வாறு நடந்துள்ளன; திட்டமிடப்படாத பணிகளில் சென்னை மாநகராட்சி வளாகத்தில் பசுமை கட்டடம், கோவை நேரு விளையாட்டு அரங்கில் விளக்குகள் அமைத்தல், திருநெல்வேலியில் விருந்தினர் மாளிகை மற்றும் மதுரையில் கருத்தரங்கு மையம் ஆகியவை அடங்கும். கார்கள், கணினிகள், சட்டக் கட்டணங்கள் மற்றும் பிற செயல்பாடுகள் உள்ளிட்ட அனுமதிக்கப்படாத செலவுகளுக்காக ஆறு நகரங்கள் ரூ.23.83 கோடி நிதியை பயன்படுத்தியது தெரியவந்தது.
சென்னையில், அரசு விளம்பரங்களுக்கு ரூ.66.58 லட்சமும், ஸ்மார்ட் சிட்டி அல்லாத திட்டங்களுக்கு ரூ.18.44 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்பின் கருத்தரங்கு அறையைப் புதுப்பிக்கவும், 110 அங்குல டிவி, கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் தளவாடங்களை வாங்கவும் நிதியைச் செலவிட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி, கழிவுநீர் அகற்றும் பணியாளர்களின் ஊதியத்தை வழங்க நிர்வாக மற்றும் அலுவலகச் செலவு நிதியிலிருந்து ரூ.2.59 கோடியைப் பயன்படுத்தியது. மதுரை மாநகராட்சி, பிற குடிமைப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களுக்குக் கட்டணம் செலுத்த ரூ.48.36 லட்சத்தைப் பயன்படுத்தியது.
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைச் செயல்படுத்த உருவாக்கப்படும் சிறப்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.200 கோடி மூலதனம் இருக்க வேண்டும். ஆனால், கம்பெனிகள் சட்டத்தின் கடுமையான விதிகளைத் தவிர்ப்பதற்காக, இவை வெறும் ரூ.10 லட்சம் மூலதனத்துடன் துவங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியும், நிதியை விவேகத்துடன் கையாளும் திட்டத்தின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையிலும், சிறப்பு நிறுவனங்களுக்குப் பதிலாக மாநகராட்சிகளே டெண்டர்களை கோரின என்பதும் தெரியவந்துள்ளது.
அந்தக்காலத்தில் நீதிபதி சர்க்காரியாவே அசந்து போனார் .... இப்படியெல்லாம் சுருட்ட முடியுமா என்று ......
இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று அண்ணாமலை சொன்ன போது, எல்லோரும் இங்கே திராவிட போலி மதச்சார்பின்மையை காக்க போராடிக்கிட்டு இருந்தார்கள்.
ஆயிரம் அசுரர்களால் ஏற்படும் அழிவு ஒரே ஒரு திமுகவால் ஏற்படும் . மனசாட்சி உள்ளவர்கள், நல்லவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் .
அரசியல் கட்சிகளை விடுங்கள். அதிகாரிகளுக்கும் பொறுப்பு இல்லையா? அவர்களை யாரும் கேட்க மாட்டார்களா ? எப்படி இவ்வாறு தவறு நடந்து கொண்டே இருக்கிறது. அரசியல் வியாதிகள் என்ன நினைத்தாலும் செய்ய முடியும் என்றால், நீதி துறை யாவது தன்னிச்சையாக நுழைந்து அதிகாரிகளை தண்டிக்கலாமே. இந்திய அரசியல் அமைப்பிலேயே பெரிய தவறு உள்ளது. Law makers அரசியல் வாதிகள் சரி செய்ய போவதும் இல்லை, மக்கள் திருந்த போவதும் இல்லை. In a democratic country, people get what they deserve. நெஞ்சு பொறுக்கவில்லையே, பாரத தாயே.
இருவரும் பக்க திருட்டு பயல்கள். இது தான் திருட்டு திராவிட கச்சிகளின் பாரம்பரியம். திருட்டு தொழில் தான் ஒற்றுமை.
திமுகவும் அதிமுகவும் என்ன நினைத்தார்கள். ஒன்று நாம் இல்லை அவர்கள். மூன்றாவதாக ஒரு புயல் வந்து இவர்கள் இரண்டு பேரையும் வீழ்த்தும் என்று நினைக்க வில்லை. என்ன ஊழல் செய்து இருந்தாலும் வெளியில் பேசுவோமே தவிர பங்கு சீராக கிடைத்ததால் ஒருவரின் அரசு சீர்கேட்டை மற்று ஒருவர் சீரியஸ் ஆக எடுத்து கொள்ள மாட்டோம் வெளியில் மக்களிடம் பேச மாட்டோம் என்று இருந்தனர் ஆனால் இப்பொழுது மூன்றாவதாக ஒரு கட்சி வந்து இவர்களின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்தி கொண்டு வருகிறது. மக்களுக்கே இவர்களின் தகிடுதத்தம் இப்பொழுது தான் வெளியில் தெரிய வருகிறது. இதே அதிமுக ஆட்சிக்கு வந்து இருந்தால் கூட இதெல்லாம் வெளி வந்து இருக்காதே.
இதன் மூலம் இரண்டு திருடர் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொன்ன கர்மவீரர் காமராஜர் ஒரு தீர்க்கதரிசி என்பது புரிகிறது
சிட்டிக்கும் ஸ்மார்ட் சிட்டிக்கும் என்ன வித்தியாசம் ? இப்ப வரைக்கும் அதே ரோடு எந்த மாற்றமும் இல்லை , லைட் முன்னர் சோடியம் வைப்போர்பல்பு இப்போது எல் ஈ டி பல்பு, சாக்கடை முன்னர் ஓபன் சாக்கடை இப்போது பாதாள சாக்கடை , குப்பைத்தொட்டி முன்னர் சிமெண்ட் தொட்டி இப்போ பிளாஸ்டிக் ட்ரொலி தொட்டி.மக்களின் வாழ்வாதாரம் சம்பளம் பெருகவில்லை அனால் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. ஊழல் லஞ்சம் மலிந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் கேள்வியோடு சராசரி மனிதன் வெதும்புகிறான்.
திரு ரவீந்திரன் செய்தியை சரியாக படிக்கவில்லை. smart city திட்டம் மதிய அரசின் சூப்பர் திட்டம். பிற மாநிலங்கள் இதை உபயோகப்படுதி பல நல்ல திட்டங்களை செய்யப்படுத்தி உள்ளார்கள். ஆனால் திருட்டு திராவிட அறிவாளி தமிழர்களும் அதற்காக கொடுக்கப்பட்ட மதிய அரசின் நிதியை கார் வாங்கவும் ஊழியர்களின் சம்பளம் கொடுக்கவும் LED tv வாங்கவும் தவறாக மற்றும் திட்டத்தில் approval இல்லாத வேலைகளை செய்து உள்ளார்கள் அது உங்கள் கண்களுக்கு தைரியவில்லை . வழக்கம் போல மதிய அரசின் திட்டத்தை குறை சொல்கிறீர்கள்.
இந்த தணிகை மூலம் திமுக சர்வாதிகார ஆட்சி நடத்தியது தெரிய வருகிறது. விதி மீறல். நிதி பயனற்ற வேறு பணிக்கு விளம்பரம் தேட, ஊழல் புரிய உதவி இருக்கும். எதுவாக இருந்தாலும், அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய தணிக்கை துறை அதிகாரம் பெற்றது. அதிகாரிகள் சம்பளம், சொத்தை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியும். இழப்பு பணம் பிடித்தம் செய்யாமல், எந்த நீதிமன்றமும் வீராணம் போல் வழக்கை பதிவு செய்ய அதிகாரம் பெற முடியாது. சட்ட மன்றத்தில் சமர்பித்து மசோதா மூலம் திமுக அமைச்சர்கள் சொத்தை அதிகாரிகள் உண்மை கூறி ஒத்துழைப்பு தர பறிமுதல் செய்ய முடியும்.
அதிகார மமதையினால் செய்த செயல். திருடர்களிடம் பணத்தை கொடுத்தல் இப்படித்தான் கொள்ளையடிப்பார்கள்.மேலும்
-
பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'