கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
சென்னை: தமிழகத்தின் முக்கிய கோவில்களில் அமல்படுத்தப்பட்ட, 'மொபைல் போன் தடை' திட்டத்தை தொடர்வதா அல்லது கைவிடுவதா என, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
கோவில்களின் பாதுகாப்பு மற்றும் ஆன்மிக அமைதியை காக்க, முதல் கட்டமாக, 52 முக்கிய கோவில்களில், செப்., 1 முதல், கோவில் உள்ளே 'மொபைல்' போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் 5 ரூபாய் கட்டணம் செலுத்தி, மொபைல்களை லாக்கரில் ஒப்படைக்க, மொபைல் வைப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
காத்திருப்பு
ஆனால், பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களை ஒப்படைக்கவும், மீண்டும் பெறவும், மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியர், கைக்குழந்தையுடன் வருவோர், கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 'யாரோ சிலர் செய்யும் தவறுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களை அலைக்கழிப்பதா' என, பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.
எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து, 'பக்தர்கள் மொபைல் போனை, வைப்பகத்தில் வைத்துவிட்டு செல்ல, கட்டாயப்படுத்தக் கூடாது; தானாக முன்வந்து தருவோரிடம் மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்' என, கோவில் செயல் அலுவலர்களுக்கு, அறநிலையத்துறை தரப்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு
இதைத் தொடர்ந்து, திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முன்தினம் காலை சென்ற பக்தர்கள், மொபைல் போன் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டனர்; மாலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், விருப்பப்பட்டவர்கள் மொபைல் போனை, வைப்பகங்களில் வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கோவில்களில், மொபைல் போன்களை பாதுகாக்க, 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல், ஒவ்வொரு கோவிலிலும், ஒரு விதமான நடைமுறை என, மொபைல் போன் தடை விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கட்டாயமில்லை
இது குறித்து, பக்தர்கள் சிலர் கூறுகையில், 'மொபைல் போன் தடை என அறிவித்துவிட்டு, இப்போது கட்டாயமில்லை என்கின்றனர். முறையான திட்டமிடல் இல்லாமல், அவசர கோலத்தில் இத்திட்டத்தை அமல்படுத்தியதே, குழப்பத்திற்கு காரணம். 'பக்தர்களை மேலும் குழப்பத்தில் தள்ளாமல், இவ்விவகாரத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும்' என்றனர்.
@block_B@
ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவிலுக்கு வரும் பக்தர்கள், அவசரத்திற்கு போன் தேவை. எனவே, போனை சுவிட்ச் ஆப் செய்து, உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். இதனால், இத்திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளும், திட்டத்தை தொடர்வதா, கைவிடுவதா என, குழப்பத்தில் உள்ளனர்' என்றனர்.block_B
இதுதான் இந்த தற்குறி தவெக ஆட்சி திறமையின் உதாரணம். உடனே மறைமுக கன்வர்ஷன் கும்பலுக்கு கொடுத்த தேவையில்லாத போன் பெட்டக கான்ட்ராக்டை ரத்து செய்ய வேண்டும். துறை அமைச்சர் நியாயமான நடவடிக்கை எடுத்தால் நல்லது.
அற நிலைய துறை மட்டுமல்ல குழப்பத்தில் விசய்யும் தான்.