இந்தியாவுக்கு திரும்புவதை திட்டமிட்டே தவிர்க்கவில்லை; சொல்கிறார் விஜய் மல்லையா
லண்டன்: இந்தியாவுக்கு மீண்டும் திரும்புவதை தான் திட்டமிட்டே தவிர்க்கவில்லை என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, 2016ல் அவர் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி சென்றார். கடந்த 2019 ல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தான் வேண்டுமென்றே இந்தியாவுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவில்லை என்றும், தான் பிரிட்டனை விட்டு வெளியேற சட்டப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில்; என்னுடைய வழக்கு தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த 2021ம் ஆண்டிலேயே என்னுடைய ரூ.14,131.60 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், என்னை வங்கி மோசடியாளர் என்றே சொல்கிறார்கள்.
எல்லாரும் என்னை நாட்டை விட்டு ஓடிப்போனவர் என்றும், இந்தியாவுக்கு வர மறுப்பதாகவும் கூறுகின்றனர். நான் 1992ம் ஆண்டு முதல் பிரிட்டனில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். நான் வேண்டுமென்றே இந்தியாவுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவில்லை. எனக்கு பிரிட்டனை விட்டு வெளியேற சட்டப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்னுடைய விவகாரத்தில் இந்திய அரசு பெரும் அநீதியை இழைத்துள்ளது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான யூபிஏ அரசாக இருந்திருந்தால் வழக்கம்போல தைரியமா வந்து போகலாம் .... இல்லையா மால்யா ஜி >>
அப்புறம் என்ன? ஒரு ரவுண்டு இந்தியா வந்துட்டு போறது.
ஒருவன் திருடன் என்று தெரிந்தும். ஒரு வளர்ந்த நாடு பாதுகாப்பு மற்றும் விசா தருவது குற்றம் ..
என்னென்னெல்லாமோ செஞ்சதுக்கப்புறமும் கொஞ்சம்கூட பயப்படாம தில்லா இந்த நாட்டிலேயே இன்னுமும் இருக்காங்க. இந்த ஆளு சும்மா ஒரு பத்தாயிரம் கோடி பிராட் பண்ணின விவாகரத்துக்கு பயந்து வெளிநாட்டுல போயி பதுங்கிக்கிட்டுருக்காரு நம்ம நாட்டுல கோர்ட்டுனு ஒன்னு இருக்குங்கறது இந்த ஆளுக்கு தெரியுமா தெரியாதா? அந்த கோர்ட்டுகள் மீதும் அதில் இருக்கிற நீதிபதிகள் மீதும் இவருக்கு நம்பிக்கையே இல்லையா? அவ்வளவு விவரம் தெரியாத ஆளா இவுரு? என்னமோ போங்க
ஸ்ரீதரா நம்மூரு கோர்ட்டு மேல இன்னமும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா.
வாங்க , 5 ஸ்டார் ஜெயில் காத்திருக்கு.
mmmmmmmmmm வுட்டா கடனே வங்களென்னும் கதாய் vuduvangko
அவர் கர்நாடக ப்ரஹ்மின் மற்றும் பெரிய இடம் தொடர்பு உடையவர் கைப்பற்றுவது எளிதில்லை
இதை எல்லாம் திருட்டு பசங்களும் சொல்வெததுத்தான்
மல்லையாவை போன்று பல குற்றவாளிகள் வெளிநாடுகளில் மற்றும் உள்நாட்டிலும் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். ஒரு சிறிய தவறு செய்தவனை தண்டிக்கும் காவல்துறை மற்றும் நீதித்துறை, ஏன் மல்லையாவை போன்று பெரிய பெரிய தவறு செய்தவர்களை இதுவரை தண்டிக்கவில்லை. எல்லாம் பணம் படுத்தும் பாடா? அப்படி என்றால் காவல் துறையும், நீதி துறையும் சாமானிய மக்களுக்கு ஏற்பட்ட கேடா?
இவனை போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை உள்ளே போட்டு... உலுக்கெடுக்க வேண்டும்.மேலும்
-
பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'