நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிவு

1


சென்னை: சென்னையில் இன்று (செப் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து 14,145 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 07) ஆபரண தங்கம் கிராம், 14,130 ரூபாய்க்கும், சவரன், 1,13,040 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


நேற்றைய நிலவரம்




நேற்று (செப் 08), தங்கம் விலை கிராமுக்கு, 140 ரூபாய் உயர்ந்து, 14,270 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,120 ரூபாய் அதிகரித்து, 1,14,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.


இன்றைய நிலவரம்




இந்நிலையில் இன்று (செப் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து 14,145 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை; ஒரு கிராம் ரூ.255, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


சிறப்பு வீடியோ!

சடாரென சரிந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement