திமுக செய்த தவறுகளை சொல்லியே ஆக வேண்டும்; அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்
சென்னை: திமுக செய்த தவறுகள், துரோகங்களை சொல்லி தான் ஆக வேண்டும். தவறுகளை சரி செய்ய நாங்கள் எவ்வளவு போராடி கொண்டு இருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கட்சியுடன் கூட்டணி இருக்கும்; எங்களுடைய ஆட்சி ஆதரவு இருக்கும் என கம்யூனிஸ்ட் கூறியுள்ளது. நாங்கள் மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறோம். திமுக செய்த தவறுகள், துரோகங்களை சொல்லி தான் ஆக வேண்டும். 5 வருடமாக திமுக செய்த தவறுகளை சரி செய்ய நாங்கள் எவ்வளவு போராடி கொண்டு இருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும்.
தமிழகத்தின் நிதி நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு துறையும் எவ்வளவு மோசமாக இருக்கிறது; 3 தலைமுறை 70 வருட கட்சி, அரசியல் இருக்கிறோம் எல்லாம் சரி தான். ஆனால் மக்களுக்கு என்ன செய்தீர்கள். நீங்கள் எதை சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். இன்றைக்கு இருக்கும் தலைமுறைக்கு சொல்லி தான் ஆக வேண்டும். திமுக கச்சத்தீவை தாரை வார்த்தார்கள்.
தற்போது துப்பாக்கிச்சூடு நடக்கிறது. மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், நீங்கள் செய்த தவறு தானே, இதை சொல்லி தானே ஆக வேண்டும். 50 வருடமாக மீனவர்கள் கஷ்டங்களுக்கு யார் பொறுப்பு; அரசியல் மற்றும் மக்களை பற்றி தெரியாத ரத்தீஷ் மாதிரியான பவர் புரோக்கரை வைத்து அரசை நடத்தியுள்ளனர்; குறிஞ்சி இல்லத்தில் உதயநிதி கூட 24 மணி நேரமும் இருந்தவர் தான் ரத்தீஷ்; அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி உடன் நெருக்கமாக இருந்த ரத்தீஷ் தலைமறைவாக இருப்பது ஏன்? இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஆமா சார் .... டிவிகே வுக்கு மாற்று திமுக .... திமுகவுக்கு மாற்று டிவிகே .... இது மக்கள் மனசுல நல்லா பதிஞ்சாகணும் .... நடுவுல அதிமுக, பாஜகவுக்கு வேலையே இல்ல .... உங்க தலைமை சார் ஏற்கனவே சொன்னமாதிரி ....
இதையே சொல்லி காலம் கடத்திவிடிவீர்கள் . ஏதாவது உருப்படியாக செய்யுங்கள். நிதி நிலைமை மோசம் என்றால் ஏன் தாய் மாமன் மோதிரம் திட்டம். மக்கள் கட்டிய வரி பணம் இப்படி வீணாக்கப்படுகிறது. எல்லா TVK MLA க்களின் சொத்தில் 50% கைப்பற்றி மக்களுக்கு இலவசம் அளிக்க வேண்டும்
தலைநகர வாசிகள் மிக பாவம் தான். நாள்தோறும் சென்னையில் ஏதாவது ஒரு பகுதியில் பவர் கட், வாகன நெரிசல், வீட்டு வாடகை உயர்வு என்று விழி பிதுங்குகிறது. இரண்டாவது ஏர்போர்ட், புதிய தலைமை செயலகம் போன்றவை சென்னைக்கு வெளியே அமைவதே இன்னும் 100 வருடம் பிரச்சினை இல்லாமல் இருக்கும்.
இது எதையும் அமைச்சர்கள் கண்டு கொள்வதில்லை. அமைச்சர்கள் திறமையானவர்களாக இருந்தால் தான் அதிகாரிகளை வேலை வாங்க முடியும். துரதிஷ்டவசமாக அமைச்சர்கள் அப்படி இல்லை. தமிழ்நாடு பாவம் தான்.
அதென்ன தவறுகளை அது வேண்டும் என்றே தெரிஞ்சு செய்த ஊழல் தைரியம் இருந்த அந்த ஊழல் பெருச்சாளிகளை சிறையில் அடையுங்கள் பாக்கலாம் நீங்கள் எல்லாம் உத்தமர்களதான்னு பாக்கலாம்
Mr. Nirmal kumar did you think about in your EB department how many issue is there like power cut, hard disk theft issue and hard disk count issue and meter accessor reading issue how to resolve these kind of issues you dont because always thinking about DMK party how make false allegation against them .
Always your CM and ministers told about no money in treasury if you dont know how to rule better resigned all of them then our earlier Dravidian parties rule they much much better ruling they are eating money also. We are suffering lot in the 115 days youre ruling. Dont have money they how your CM announced all MLA to give the new CAR and New Legislative building and renovation of old building because that all are people money.
In the same situation in your you think about all sophisticated and luxury life? you dont because your money.
அவர்களுக்கு தேவை இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் அதற்காக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது அவதூறுகளை பரப்ப வேண்டும். இவர்களிடம் நிர்வாக திறமை மட்டும்தான் இல்லையே தவிர அடுத்தவர்களை கேவலப்படுத்தி அரசியல் செய்வதில் ஆதாரம் இல்லாத ஒன்றை மக்கள் நலன் பற்றி பேசவேண்டிய சட்ட சபையில் நேரத்தை வீணடித்து திரித்து கூறுவதில் மிக கை தேர்ந்தவர்களாக உள்ளனர். செயல்பாடுகளில்லாத இவர்களின் வெறும் ரீல்ஸ் மக்களிடையே எடுபடாது.
ரொம்ப சாதாரண சொல் தவறு என்பது. அவர்கள் செய்தது மக்களின் வரிப்பணத்தைத சூறையாடியது, இவை தமிழகர்களுக்கு இழைத்த துரோகம், அநீதி, தீமை, அடாவடி, அக்கிரமம், இன்னும் சொல்லலாம். இந்தக்கட்சி தடை போடவேண்டிய கட்சி.
ஊழல் செய்தவர்ககள் பற்றி அவர்களிடமே சட்டசபையில் சொல்வதால் என்ன பயன்? புரியவவில்லை.
Mr. Nirmal Kumar - Any idea how to resolve about EB related issues power cut and EB office hard disk count issue and meter reading issue about more money comes to the Most of the houses. Today in my area without intimation power cut happened past 5 hours. I think you dont have any idea how to resolve these kind of issue. Because you always thinking about DMK party how to give false allegation to give it and how to make blaming game always your are blabbering about DMK. People gave mandate for your are a ruling party. If you dont know how to ruling better resigned the other Dravidian parties ruled properly.
Always your people telling dont have money in Treasury. Then why you gave the cars and new Legislative assembly required now because it is public money your TVK government also bought another 7 Cr loan and enjoyed sophisticated life with public money. The same like in your family financial cringes did you think about buy new car and new house? you are not thinking because your money .
Mr. siva, why you were silent during DMK rule. are you in coma stage??
ஊழல், திருட்டு, கொள்ளை, மோசடி, கள்ளச்சாராயம், நில அபகரிப்பு, பொய் பிரச்சாரம், ரௌடி தனம், அகங்காரம், கொத்தடிமை முறை போன்ற பல்வேறு பாட திட்டம் திமுக பல்கலைக்கழகத்தில் உள்ளன. தினமும் அதனை படித்து படித்து பேசினால் தான் திமுகவின் உண்மையான முகம் தெளிவாக தெரியும். திராவிட முன்னோடிகள் எப்படி தெரு கோடியில் இருந்து உலக கோடீஸ்வரர்கள் ஆன விபரம் தெரியும்
MLA , Minister சம்பளம், பயண படி , ஓய்வூதியம் என்று ஒரு நாள் சட்டசபை செலவு பல கோடிகள் வரும். மக்களின் வரி பணம் வீணாகிறது. மாற்றம் வராதா என்று ஆவலில் ஓட்டளித்த அனைவரையும் ஏமாற்றும் ரீல்ஸ் ஆட்சி இனி வரவே வராது. ஜென் ஸீ யும் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். வாக்களிக்கும் மக்கள் இனி யோசித்து ஓட்டு போட்டால் தான் தமிழ்நாட்டை மீட்டெடுக்க முடியும்.மேலும்
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
-
கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்; பொதுக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்க முடிவு