வர்த்தகப் போர் தீவிரம்; கனடாவிலிருந்து பால் பொருட்கள், மோட்டார் சைக்கிள் இறக்குமதிக்கு தடை விதித்தது அமெரிக்கா!

5


வாஷிங்டன்: கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரும்பாலான மதுபானங்களுக்கு அமெரிக்கா முழுமையான தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்தது.

அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா மீது அமெரிக்க அரசு 50% இறக்குமதி வரியை விதித்துள்ளதுடன், கனடாவின் வர்த்தக முறைகேடுகள் குறித்த அறிக்கையையும் வெளியிட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது எதிர் வரி விதிக்கப் போவதாகப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்து இருந்தார்.

தற்போது கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரும்பாலான மதுபானங்களுக்கு அமெரிக்கா முழுமையான தடை விதித்துள்ளது இதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த இறக்குமதித் தடைகள் வரும் செப்டம்பர் 29ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. பால் மற்றும் மோட்டார் சைக்கிள் தடைகள் தவிர, கனடாவின் புகழ்பெற்ற சீஸ் வகைகளுக்கு 50% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் (Trade War) காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இந்த நடவடிக்கைக்குப் பிறகு, அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, கனடா தனது பொருளாதாரத்தை மேலும் வலுப்படும் என உறுதியுடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா விதித்த பழிவாங்கும் வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக அமெரிக்கா இந்த தடையை அறிவித்துள்ளது.

Advertisement