தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது; அமைச்சர் அருண்ராஜ் தகவல்
சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டி: முதல்வர் விஜய்யின் வெளிநாடு பயணம் காரணமாக மதுரை உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட துவக்கம் தள்ளிப்போகிறது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். செப் 15ல் திட்டமிடப்பட்ட தேதியில் துவங்கப்படாது; திட்டத்தில் வழங்கப்படும் மோதிரங்கள் 100 சதவீதம் தரமானவை.
அனைத்து மோதிரங்களிலும் 916 ஹால்மார்க் முத்திரை இடம்பெறும். தங்கத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் இருக்காது. பருவமழை துவங்க உள்ள நிலையிலும் டெங்கு சீசன் ஆரம்பிக்க போகிறது. படிப்படியாக ஒவ்வொரு நாட்களும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறோம்.
கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மழைநீர் தேங்காத வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். வீடு உட்பட எல்லா இடங்களிலும் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள நேரக் கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்படும்.
மதியம் 1:00 முதல் 2:00 மணி மற்றும் மாலை 4:00 -6:00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பைகளில் உணவு எடுத்து வரவும் தடை விதிக்கப்படும். சுகாதாரத் துறையின் முதல் நோக்கம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.
இரண்டாவது தான் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது; ஆரோக்கியம் சார்ந்த அனைத்து செய்திகளும் ஏழை, பணக்காரர் பாகுபாடு இல்லாம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்; மக்கள் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவை குறைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
தாய்மாமன்களா இவங்க .... டேஷ் மாமன்கள் என்று கவுண்டமணி ஒரு படத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது .....
சிங்கப் பெண் படை திட்டம் எத்தனை முறை தள்ளி வைக்கப் பட்டது? அதே போலதான் தாய் மாமன் தங்க மோதிர திட்டமும் போல?
செவலை... தாவுடா தாவு...? “எங்கே தாவுறது... நானே இங்கே தவழ்ந்துட்டு இருக்கேன்... எங்கே தாவுறது” ஆஹா... ஒண்ணு கூடிட்டாங்கய்யா... ஒண்ணு கூடிட்டாங்க..” அப்படீங்கற வடிவேல் முரளி காமெடிதான் நினைவுக்கு வருகிறது...?
தாய் மாமன்தான் தங்கம் போடவேண்டும் என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா? தகப்பன் வழி சித்தப்பா போடக்கூடாதா? புது சட்டம் கொண்டுவாங்க. மக்களின் வரிப்பணத்தை எப்படி எல்லாம் விரயம் செய்யமுடியுமோ செய்யுங்க. ஆட்சியின் அதிகாரத்தில் இருக்கும் உங்களை கேட்பார் யாரு?
சென்னை அண்ணா நகரில், நுழைவு வாயில் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது மழை நீர் தேங்கியுள்ளது. இது ஒவ்வொரு மழைக்கும் தேங்குகிறது. இதன் காரணமாக, வாகனத்தில் செல்வவர்கள் திடீரென லைன் மாறுகிறார்கள், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பாலத்தின் மேலே செல்லும் வாகனங்கள், இந்த தேங்கிய மழை நீரின் மேலே செல்லும் பொழுது, நீரை பீய்ச்சி அடிக்கின்றன. இது பாலத்தின் கீழே செல்பவர்கள் மீது விழுகின்றது. அவர்களும் பதட்டப்படும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பாலத்தின் மீது மழை நீர் தேங்காவண்ணம் வடிகால் வசதி செய்யவேண்டும். தேங்கும் நீரில் கொசு உற்பத்தியாவதை தவிர்க்கலாம். அமைச்சர் சொல்வது போல் அனைவரது ஒத்துழைப்பும் தேவை.
ஆமாங்க ஒத்துகிட்டோம் வெளிநாடு தான் முக்கியம். அப்பால நேரமிருந்தால் நகை, 916 எல்லாம் பார்க்கலாம்.
எல்லா தாய் மார்களும் ஜாய் அழுக்காசில் வாங்கி முதூட்டில் அடமானம் வைப்பார்கள் இரண்டும் கேரளா நிறுவனங்கள் செய்கூலி சேதாரம் லாபம் எல்லாக் ஜாய் அழுக்காசுக்கு வட்டி லாபம் எல்லாம் George Jacob முத்தூட் பினன்ஸ்க்கு
தாய் மாமன் தங்க மூத்திர திட்டம் முற்றிலும் உழலுக்கான திட்டம் அதனால் தனியார் நகை கடை உரிமையாளர்கள் பயன் அடைவார்கள். அந்த ரிபாக் 5000 பரிசு பை தேவையற்ற செலவு. அதற்கு பதில் தமிழ் நாடு அரசு தங்க மகள் திட்டத்தில் கணக்கு உருவாக்கி ரூபாய் 15,000 தாய் டெபாசிட் செய்தல் வட்டியுடன் பெருகி அந்த குழந்தை கல்லூரி மற்றும் துர்மணத்தின் பொது பயன்படும். இது தட்டை பெண் குழந்தைகளுக்கு மட்டும் அமுல் படுத்தினால் மட்டும் போதும் ஆன் குழந்தைக்குகள தேவை இல்லை.