நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் அதிருப்தி 

பண்ருட்டி, செப்.10–

அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் கடந்த 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  

பண்ருட்டி அடுத்த மாளிகைமேட்டில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சிறுவத்துார், பகண்டை, சித்திரைசாவடி, பணப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை விற்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த 15 நாளாக அனுமதி வரவில்லை எனக்கூறி, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்யாமல் உள்ளனர். இதனால், 2000 மூட்டை அளவிற்கு திறந்த வெளியில் நெல் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மழை வந்தால் நெல் மழையில் நனைந்து வீணாகி விடும் என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

Advertisement