மாற்றுத்திறனாளி விபத்தில் பலி

கீழக்கரை: கீழக்கரை அருகே மாவிலாத்தோப்பை சேர்ந்தவர் அஞ்சன மூர்த்தி 57. மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் இரவு ஏர்வாடி அருகே கல்பார் செல்லும் சாலையோரம் படுத்து இருந்தார். அவர் மீது கர்நாடகாவை சேர்ந்த அப்துல் கரீம் 56, ஓட்டி வந்த கார் மோதியதில் காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement