வந்தே மாதரம் முழு பாடலுக்கு காங்கிரஸ் மீண்டும் எதிர்ப்பு; இண்டி கூட்டணியில் புகைச்சல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழாவில் 'வந்தே மாதரம்' முழுமையாக பாடப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. இதனை தேசிய மாநாட்டு கட்சி கண்டித்ததால், கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மாநிலத்தில் சர்வதேச திரைப்பட விழாவில், வந்தே மாதரம் பாடலில் முழு பாடல் இசைக்கப்பட்டது. அப்போது, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தன்னுடைய எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, "வரிகள் நீக்கப்பட்ட வந்தே மாதரம் பாடலை இசைக்கும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு ஆதரவு கொடுத்து, அதன்படி உறுதியாக இருக்க வேண்டும்," என்று தங்களின் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சிக்கு கோரிக்கை விடுத்தார்.
ஆனால் காங்கிரஸின் இந்தச் செயலுக்கு தேசிய மாநாட்டு கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் பஷிர் அகமது,"வந்தே மாதரம் பாடலை எப்போது பாட வேண்டும், எவ்வளவு பாட வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் எங்களுக்கு உத்தரவு போட வேண்டாம். யாரும் இதை திணிக்க முடியாது. எல்லாம் மக்களின் விருப்பம். மக்கள் மீது திணிக்கப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்," என்று தடாலடியாக கூறி விட்டார்.
இதன்மூலம், வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் இண்டி கூட்டணி கட்சிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, வந்தே மாதரம் முழு பாடல் இசைக்கப்பட்டதற்கு, அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது இந்த செயலுக்கு பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது தெளிவாக தெரிந்துவிட்டது. காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டு 4 லட்சம் பேர் துரத்தப்பட்டு நாடிழந்ததற்கு கான்கிராஸ் கட்சியே காரணம். பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். காங்கிரஸை கலைத்து விட வேண்டும். காங்கிரஸில் உள்ள சசி தரூர், கெலாட், ரமேஷ், போன்ற பழுத்த அரசியல்வாதிகள் ஏன் ராகுலை தலைவராக ஏற்று நட்க்கிறார்களோ?? இவ்வளவு பழைய கட்சிக்குள் தைரியம் இல்லாமல்
ஏன் ஒண்டிக்கிட்டு இருக்க வேண்டும்?.ஆட்டுக்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக இருங்க அய்யா
இத்தாலிய தேசிய கீதம் போட்டால் ஒரு மணிநேரம் கூட கால் கடுக்க நிர்ப்பானுக. வெட்கம்கெட்ட காங்கிரஸ் தொண்டர்கள்
அந்தம்மா என்னென்ன பொய்யும் புரட்டும் அந்த புத்தகத்தில் எழுதிச்சோ அதனால் தான் வெளியிட யாரும் தயாராக இல்லை!
சோனியா இத்தாலிக்கு போய் விடுங்கள் . எங்கள் நாட்டுப்பாடலை எப்படி இசைக்கவேண்டும் என்று சொல்லத்தேவை இல்லை .
தேச துரோக கட்சியை எதற்கு கூட்டணியில் வைத்திருக்க வேண்டும்? நாட்டுப்பற்று இல்லாத துரோகிகளை பார்சல் பண்ணி இத்தாலிக்கு அனுப்பி வைங்க!
வந்தே மாதரம் பாடல்தான் நம்நாட்டு சுதந்திரத்திற்கு வித்திட்டது . அதில் இருந்து எந்த வரிகளையும் நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை . அந்த பாடலை கேட்க, பாட பிடிக்காதவர்கள் இந்திய திருநாட்டை விட்டு போய்விடுங்கள்.
அப்துல்லாவே முழு வந்தேமாதரம் பாடல் சரி என்கிறார். சோனியா ராகுல் கம்பெனி வேண்டாம் என்கிறது. நீங்களே முடிவு செய்யுங்கள் இந்தக்கட்சி நம்நாட்டில் இருக்க வேண்டுமா
இந்தியாவை விட்டு விரட்டியப்போம் இந்த காங்கிரஸ் கயவர்களை. கூட்டணியில் சேர்த்ததற்கு ஷேம் ஷேம் சோசப் விசய்
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை தேச விரோத நிலைப்பாட்டால் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். தேச விரோத, தீவிரவாத கட்சி என்று முத்திரை குத்தி தடை விதிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி இந்திய நாட்டுக்கு எப்போதும் விசுவாசமாக இருந்ததில்லைமேலும்
-
பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'