சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவிப்பு
பொன்னேரி: பொன்னேரி தாலுகா அலுவலக சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிற்பதால், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில், சப் – கலெக்டர் அலுவலகம், நான்கு நீதிமன்றங்கள், சார் – பதிவாளர், வருவாய் துறையின் பல்வேறு பிரிவு அலுவலகங்கள், கிளை சிறை ஆகியவை உள்ளன. இங்கு, வருவோர், தங்கள் வாகனங்களை சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால் நெரிசல் ஏற்பட்டு, ரயில் நிலையம், மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், ரயில் பயணியர் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
எனவே, இந்த சாலையில் நெரிசலை தவிர்க்க, ‘பார்க்கிங்’ வசதி ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
தாலுகா அலுவலக சாலையில் பல்வேறு அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களுக்கு வருவோரின் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை. கிளை சிறை அருகே பல்வேறு வழக்கு வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு ‘பார்க்கிங்’ வசதி ஏற்படுத்தலாம்.
அதேபோல, குடிநீர் வாரியத்தின் இடமும் செடி, கொடிகள் வளர்ந்து, பராமரிப்பு இன்றி உள்ளது. அந்த இடத்திலும், வாரியத்தின் அனுமதியுடன் வாகனங்களை நிறுத்த திட்டமிடலாம். எனவே, போக்குவரத்து நெரிசலுக்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
-
கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்; பொதுக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்க முடிவு